அரசியலில் என்று என்ன நடக்கும் என்பதை கணிப்பது என்பது மிகவும் சிக்கலான ஒன்று அந்த வகையில் பழைய மாடலை செயல்படுத்தி இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார் வெற்றி மாறன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர்ச்சியாக பாஜகவிற்கு எதிராக தன்னை இந்திய அளவில் முன்னிலை படுத்த நினைத்து அடிக்கடி பாஜகவிற்கு எதிராக தீவிர கருத்துக்களை தெரிவித்து வருகிறார், தற்போது கூட ஹைதராபாத்தில் நடக்கும் TRS பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளராக திருமாவளவன் கலந்து கொண்டு உள்ளார்.
இந்த நிலையில் உண்மையான கள நிலவரத்தை அறியாமல் சமீபத்தில் சிக்கி சிதைந்தார் திருமா மேலும் அவரை காப்பாற்ற வெற்றி மாறன் இறங்கியும் தற்போது அந்த நிலை தொடருவது அதிர்ச்சியை திருமா தரப்பிற்கு கொடுத்துள்ளது, RSS ஊர்வலத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டத்தை நடத்த போகிறோம் என அறிவித்த திருமா, தனது அணியில் திமுகவை தவிர கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளையும் ஒன்று இணைய்தார்.
இது திமுகவிற்கு நெருடலை கொடுத்தது மேலும் விசிக மனித சங்கிலி போராட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டது, இந்த சூழலில் பமுன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம் எனவும் மீண்டும் வேறொரு நாளில் நிச்சயம் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தியே தீர்வோம் எனவும் திருமா தனது கூட்டணி தலைவர்களை கொண்டு அறிவித்தார்.
இது மேலும் திமுக தரப்பை அதிருப்தியில் ஆழ்த்திய நிலையில் முழுமையாக இந்த நிகழ்வுகளை தவிர்க்க முக்கியமான தலைவர் மூலம் உத்தரவு சென்று இருக்கிறது, ஆனால் திருமாவளவனோ மக்கள் மத்தியில் நாங்கள் RSS அணிவகுப்பிற்கு போட்டியாக மனித சங்கிலி போராட்டடம் நடத்த போவதாக தெரிவித்து இருக்கிறோம்.
நாளை நடத்தவில்லை என்றால் முன் வைத்த காலை பின் வைத்தது போன்று ஆகிவிடும் எனவே நடத்துவது உறுதி என திருமா தரப்பில் கூறப்பட்டு உள்ளதாம். இதையடுத்து உடனடியாக RSS மற்றும் திருமா மனித சங்கிலி போராட்டத்தில் மக்கள் கவனம் செல்வதை திசை திருப்ப வெற்றி மாறன் மூலம் ராஜ ராஜ சோழன் இந்துவாக உருவக படுத்த பார்க்கிறார்கள் என்ற கருத்தை வெற்றி மாறன் பேசியதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் திருமா மனித சங்கிலி போராட்டம் பற்றிய தகவல் டம்மி ஆனதுடன் வெற்றி மாறன் பேச்சு விவாத பொருளாக மாறி இருக்கிறது, உண்மையில் வெற்றி மாறன் விமர்சனத்தில் சிக்கி திருமாவை காப்பாற்றி இருக்கிறார் எனவும் இல்லை என்றால் மனித சங்கிலி போராட்டத்தில் கூடும் கூட்டத்தை பார்த்து திருமா மற்றும் அந்த கட்சிகளின் கூட்டணி பலம் என்ன என்பது உலகிற்கு தெரிய வந்து இருக்கும்...
நல்ல வேலை வெற்றிமாறன் வழிய வந்து திருமாவை காப்பாற்றி இருப்பதாக கூறப்படுகிறது, அதே நேரத்தில் முன்பெல்லாம் இந்துக்கள் குறித்து ஏதேனும் நடிகர்கள், இயக்குனர்கள் கருத்து தெரிவித்தால் சினிமா துறையில் எதிர்ப்புகள் கிளம்புவது குறைவு ஆனால் தற்போது வெற்றி மாறனுக்கு எதிராக நடிகை குஸ்பு, இயக்குனர் பேரரசு என தொடர்ச்சியாக பலரும் பதிலடி கொடுத்து வருவது உண்மையில் சினிமா துறையிலும் மாற்றங்கள் அரங்கேறி வருவதை மெய்பித்து இருக்கிறது என்கின்றனர் அரசியல் அறிந்தவர்கள்.
மொத்தத்தில் திருமாவை விவாத பொருளில் இருந்து கரைசேர்க்க நினைத்த வெற்றி மாறன் கடும் சிக்கலில் சிக்கி இருக்கிறார்.