சமீபத்தில் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி ரத்தானது, விஜய் ரசிகர்கள் அரசியல் தலையிட்டால் தான் நிறுத்தப்பட்டது என சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் லியோ படம் அக்டோபர்19 தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. முன்னதாக ஆடியோ லாஞ் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்க இருந்தது பின்னர் தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.இதற்க்கு திமுக உதயநிதி ஸ்டாலின் தான் காரணம். என அரசியல் வட்டாரங்களே ஆணித்தனமாக சொன்னது.தற்போது நடிகர் விஜய்க்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகிவுள்ளது.இதற்க்காகத்தான் படத்தின் ஆடியோ லான்ச் நிறுத்தப்பட்டதாக புதிய திடுக்கிடும் தகவல் நம்பத்தகுந்த சினமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவது ஏறத்தாள உறுதியாகிவுள்ளது.இதற்காக விஜய்யின் மக்கள் இயக்கம் தீவிர வேலை பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. திரைப்படங்களில் அரசியல் குறித்து சூசகமாக அரசியல் தலைவர்களை நேரடியாக விமர்சிப்பதும்,வசனங்கள் மூலம் பொதுமக்களுக்கு ஆதரவாகவும் பேசிவருவது வழக்கமாக வைத்துள்ளார்.இதனிடையே லியோ படத்திலும் அரசியல் புகுத்தப்பட்டுள்ளது. அதாவது ஆடியோ லான்ச்-க்கு ஏற்பாடுகள் நடந்த நிலையில் பெறுமளவு டிக்கெட் விற்பனை முடிந்த நிலையில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் வரும் நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உள்ளே அனுமதித்து முன்வரிசையில் இருக்கைகளும் விடவேண்டும் என நிர்வாகி தரப்பில் கோரிக்கைகளும் விடப்பட்டுள்ளது.
இதனை சற்றும் எதிர்பாராத தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.திரைப்பட நிகழ்ச்சி அரசியல் களமாக மாற்றப்படுவதை தவிர்க்கவே லியோ படத்தின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அரசியலுக்காகவே திரைப்படம் நிகழ்ச்சியில் இளைஞர் கூட்டத்தை கூட்டி பெரும்பான்மையை வலுப்படுத்தவுமே இவை நடத்தப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் தற்போது வரை இயக்கமாக செயல்படுகின்றது. அரசியலுக்காக அன்னையின் அடுத்த தலை முறையான மாணவர்களுக்கு நிகழ்ச்சி ,பனையூர் விடுதியில் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் மகளிர் அணி என அனைத்தையும் தயார்படுத்தும் வேளையில் களமிறங்கியுள்ளார்.இதையடுத்து அரசியல்வாதி போல் அரசு விடுமுறை தினமான அக்-02 காந்திஜெயந்தி -ல் தலைவர் சிலைக்கு மாலை அணிவித்தல் வேண்டும் என கட்டளையும் போடப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் முன்னே அரசியலுக்கான அனைத்து வேலையையும் பார்த்துவிட்டுத்தான் அரசியலுக்குள் என்டரியாகிறார்.லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் தமிழகத்தில் ஆளும் கட்சி தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பும் என நினைத்த நிலையில் நடிகர் விஜய் தரப்பிலே அரசியல் புகுத்தப்பட்டது முரண்பாடகிவுள்ளது.சமீபத்தில் இசைப்புயல் ரகுமானின் இசை நிகழ்ச்சி பாதுகாப்பு குறைபாடு காரணத்தால் பல்வேறு குற்றங்கள் நிகழ்ந்ததை காரணம் காட்டியே லியோ படத்தின் ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.