தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ராதிகா சரத்குமார் தற்போது சினிமாவில் சிறிய சிறிய கதா பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் தமிழ் சீரியல் மூலம் அதிக மக்களை கவர்ந்த இவர்ரது கோயம்பத்தூரில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியது: கோயம்பத்தூரில் சினிமா துறைக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும். சென்னையில் உள்ளது போல் சினிமா சிட்டி போன்று கோவையில் வசதிகளை கட்டமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தினார். அந்த காலத்தில் பெண்களை தொடாமல் படப்பிடிப்பு நடத்தினர், அந்த நிலை இந்த கலக்கடத்தில் மாற்றியுள்ளது. இருப்பினும் இந்த காலகட்டத்தில் திரைப்படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் தற்போது அதிகரித்துள்ளது.
காலத்திற்கு ஏற்ப சினிமாவில் கதைக்களம் மாறி வருகின்றன அதையும் மக்கள் வரவேற்பு அளித்து ரசிக்கின்றனர் என கூறினார். எங்கு பிரச்னை நடந்தாலும் அது இணையம் மூலமாக தான் முதலில் பரப்பப்படுகிறது. அது நன்மையாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி அதனை பரப்புவதற்கு பதிலாக, இணையத்தில் கண் தானம், உடல் உறுப்பு தானம் போன்ற நல்ல விஷயங்களை மக்களிடம் சேர்ப்பதற்கான வழிகளை ஏற்படுத்துங்கள். மேலும், கோவைக்கும் எனக்கும் எப்போதும் நல்ல உறவு இருக்கிறது, நான் சிறு வயதில் என்னுடயை தந்தையுடன் வந்து இருக்கிறேன் எனக்கு இந்த கோவையில் நிறைய நண்பர்கள் இருக்கின்றனர், என்னுடைய முதல் படம் கோயம்பத்தூரில் தான் தொடங்கியது எனவே கோயம்பத்தூர் எனக்கு ஸ்பெஷல் என தெரிவித்தார்.
தொடர்ந்து காவிரி விவகாரம் குறித்து கேட்டதற்கு பதில் அளித்த ராதிகா கர்நாடக அமைப்பினர் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கின்றனர். இதனால் முழுவதும் பாதிப்படைவது விவசயிகள் தான் சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதனை கர்நாடக அரசு அமல் படுத்த வேண்டும், போராட்டம் என்பது இறுதி தீர்வை தராது இரு மாநில அரசுக்குள்ளும் சமரசம் பேசி தண்ணீர் திறப்பதற்கான வழி வகை செய்ய வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ராதிகா சரத்குமார், பெங்களுருவில் நடிகர் சித்தார்த் தாக்கப்பட்டது எனக்கு தெரியவில்லை என கூறியது சமூக வலைத்தளத்தில் பேசரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, சித்தார்த் சம்பவம் குறித்து தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி கர்நாடக நடிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தும், இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கூறிய வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தமிழ் நடிகர் தாக்கப்பட்டது தெரியாது என கூறுவது வியப்பாக உள்ளதாக நெட்டிசன்கள் நடிகை ராதிகா சரத்குமாரை விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு ரொம்ப வருடம் பேசப்பட்டது. தற்போது மத்திய அரசின் மூலம் அமல் படுத்தப்பட்டது பெருமைக்குரியது. அதனை வரவேற்கிறேன் மேலும் இடஒதுக்கீட்டை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். தற்போது ஆன்லைன் விமர்சகர்கள் அதிகமாக வந்துள்ளனர் எனவே நாம் எது பேசினாலும் யோசித்து தான் பேச வேண்டும். அவர்கள் அதனை வைத்து தான் பிழைப்பை நடத்துகின்றனர். அவர்களை தடுக்க முடியாது என யூடியூப்பர்ஸ்களை விமர்சிப்பதாக கருத்துக்கள் எழுந்துள்ளன.