தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் "தமிழ் சினிமா" துறையினரிடம் தெரிவித்தனர் குறிப்பாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் திரைப்படங்களில் ஒரு பக்க சார்பாக அரசியலை தேர்ந்தெடுத்து பேசி வந்தனர்.
இந்த சூழலில்தான் தற்போது அதே போன்று செயல்பட்ட பிரபல நடிகர் வெளியில் சொல்ல முடியாமல் புலம்பி வருகிறாராம், சினிமா துறையில் முக்கிய நடிகர்கள் படங்கள் அனைத்தையும் இரண்டு ஆளும் கட்சி சார்புள்ள தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே தயாரித்து வருகின்றனவாம். அதோடு நில்லாமல் வேறு சிலரின் படங்களின் தொலைக்காட்சி உரிமையை தரவேண்டும் என அழுத்தமும் உண்டாகி இருக்கிறதாம்.
பலர் இதனை வெளிப்படையாக சொல்லிவிட்டனர், மாநாடு திரைப்படத்தை வெளியிட எத்தனை சோதனைகளை சந்தித்தோம் என டி.ராஜேந்திரன் புலம்பியதில் இருந்தும், அவரது மனைவியுடன் போராட்டத்தில் இறங்கியதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். இந்த சூழலில் தான் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவரும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவருமான பிரபலம் ஒருவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்திக்க முயற்சி செய்து வருகிறாராம்.
பிரபல தயாரிப்பு நிறுவனம் அவரை இந்த வருடத்தில் இரண்டு படங்களுக்கு கால் சீட் கொடுக்க வேண்டும் மேலும் சம்பளமாக பாதி தொகை தான் கொடுப்போம் வெளிநாட்டு உரிமையை உங்களுக்கு கொடுப்போம், ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி முதல் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி வரை அனைத்திலும் கலந்து கொள்ள வேண்டும் என அன்பாக மிரட்டியுள்ளதாம்.
இனியும் தாமதித்தால் பெரும் பின்னடவை சந்திக்கவேண்டி இருக்கும் என்பதால் மத்திய அரசுடன் உறவை வளர்த்து கொள்ள முயற்சி செய்து வருகிறாராம், எனவே அண்ணாமலையை சந்திக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம் விரைவில் இருவரின் சந்திப்பு நிகழலாம் எனவும் கூறப்படுகிறது.
சிலர் சொல்லி திருந்துவார்கள், சிலர் பட்டால் தான் திருத்துவார்கள் என்ற பழமொழி தமிழக திரைத்துறையினர் பலரின் வாழ்க்கையில் நடந்து வருகிறதாம் .