
திரை உலகில் நிறம் ஒரு நடிகைக்கு மிகவும் முக்கியம் என்பதை முறியடித்து காட்டியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஏனென்றால் இவரின் நடிப்பை பார்க்கும் பொழுது நமக்கு மிகவும் தெரிந்த பெண்ணை போன்றும், நமது பக்கத்து வீட்டு பெண்ணை போன்றும் ஒரு எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இதனால் இவருக்கு ஆரம்பத்தில் கிடைத்த வரவேற்புகள் அனைத்தும் தற்போது அவரை ஒரு முன்னணி நடிகையாக மாற்றி உள்ளது. அதாவது அட்டகத்தி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிறகு பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, ரம்மி போன்ற படங்களில் மூலம் நல்ல வரவேற்பை கண்டு தற்போது பெண்களை முன்னிலைப்படுத்தி, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இப்படி இவர் தனது நடிப்பு பயணத்தை தொடங்கி கிட்டதட்ட 12 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
இருப்பினும் தனது படத்தின் மூலமே பல விமர்சனங்களை சந்தித்தும் உள்ளார். அதாவது பர்கானா என்ற திரைப்படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் மத ரீதியில் பல எதிர்ப்புகளையும் சில விமர்சனங்களையும் பெற்று தனது வீட்டிற்குள்ளே சில நாட்கள் முடங்கியும் இருந்துள்ளார். இவரின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து கடந்த வருடம் முழுவதும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு ஒரு ஜாக்பாட் வருடமாக இருந்தது. ஏனென்றால் கடந்த வருடத்தில் மட்டும் அதிக படங்கள் இவரது நடிப்பில் வெளியானது. இருப்பினும் அவற்றில் சில படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை. மேலும் சமீபத்தில் அன்னையர் தினத்தின் பொழுது தனது தாய் பட்ட கஷ்டத்தையும் தியாகத்தையும் பார்த்து தனது தாயிடம் விடாமுயற்சியை கற்றுக் கொண்டதாகவும் தனது தந்தை பலரின் கடனுக்கு கேரண்டி கையெழுத்து போட்டு பிறகு திடீரென உயிரிழந்து அந்த கடன் மொத்தத்தையும் தனது அம்மாவை கட்டினார், என்பதையும் கூறி! தனது தந்தையிடம் இருந்து யாரையும் நம்பி விடக்கூடாது என்பதை கற்றுக் கொண்டதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் வாழ்க்கையில் நடந்த கண்ணீர் சம்பவங்கள் அனைத்தும் இணையதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது ஐஸ்வர்யா ராஜேஷின் தாத்தா அமர்நாத் தெலுங்கில் சில படங்களின் ஹீரோவாகவும் ஹிந்தியில் ஹீரோவாகவும் நடித்துள்ளாராம். அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை ராஜேஷும் தெலுங்கு சினிமாவில் நடிகராகவும் மலையாளத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படி சினிமா பின்புறத்தைக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் கருவிலே கலைக்கப்பட இருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ராஜேஷ் - நாகமணி ஜோடிக்கு தொடர்ச்சியாக மூன்று ஆண் குழந்தைகளை பிறந்ததால் பெண் குழந்தை வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது நான்காவது முறையாக ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார் கர்ப்பமாகும் பொழுது இதுவும் ஆண் குழந்தையாக இருந்தால் என்ன செய்வது என்று நினைத்து கரு கலைக்க முடிவு செய்துள்ளனர் இருப்பினும் அதிர்ஷ்டவசமாக கருக்கலைக்கப்படாமல் பிறந்தவரே ஐஸ்வர்யா ராஜேஷ்! அதற்குப் பிறகு தனது எட்டு வயதிலேயே தனது அப்பா ராஜேஷையும் இழந்துவிட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தனது இரண்டு அண்ணன்களும் தொடர்ச்சியாக இறந்தால் பொருளாதார தேவைகளுக்காக வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்பொழுது நடிப்பின் மீது ஆர்வம் இருந்த ஐஸ்வர்யா திரையுலகில் காலடி எடுத்து வைத்ததும் அவரது நிறத்தை காரணம் காட்டி பல இடங்களில் நிராகரிப்பை சந்தித்துள்ளார். மேலும் இந்த மூஞ்சி எல்லாம் நடிக்கிறதுக்கு செட்டே ஆகாது என்ற பல விமர்சனங்களையும் நேருக்கு நேராக சந்தித்துள்ளார். இருப்பினும் அதனைத் தாண்டி அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்து காக்கா முட்டை என்னும் திரைப்படத்தின் மூலம் இரண்டு தேசிய விருதுகளையும் பெற்று தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்திலும் கலக்கி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்!