தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சூர்யா மற்றும் விகாரம் இடையே திரைக்கு மோதல் வந்துவிட்டது என்று தான் சொல்லணும். இரண்டு பெரும் விஜய், அஜித் பிறகு அடுத்த வரிசையில் இருக்கின்றனர். அந்த வகையில் பிரியாடிக் பிலிமில் கங்குவா படத்தில் நடித்து வரும் சூர்யா முன்னதாக இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் கடந்த ஆண்டு வெளியிட முயற்சி செய்தனர். ஆனால், படத்தில் ஏகப்பட்ட VFX பணிகள் இருந்ததால் அதனால் அந்த படத்தை கோடை காலத்தில் வெளியிட மும்முரம் காட்டி வருகின்றனர் தற்போது அங்கு தான் விக்ரம் வந்து சூர்யாவுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
பிதாமகன் படத்தில் இருவரும் ஒன்றாக பணியாற்றினார். அப்போது இருவரின் நடிப்பு கண்டு ரசிகர்கள் வியந்தனர் அபப்டி ஒரு கதா பாத்திரத்தில் நடித்திருப்பார்கள். நெருங்கிய நண்பரான சூர்யா, விக்ரம் ரசிகர்கள் சன்டை போட்டு கொண்டுள்ளனர். இந்த ஆண்டு பொங்கலுக்கு தங்கலான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் பின்னர் ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், படத்தின் மேக்கிங்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏகப்பட்ட பேட்ச் வொர்க் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைந்து கிடப்பதால் தங்கலான் திரைப்படம் மார்ச் 29ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
சூரி நடிப்பில் உருவாகி உள்ள கருடன் படம் மார்ச் 29 ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மார்ச் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதத்துக்கு தங்கலான் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. தங்களது படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. எப்படி விஜய், அஜித் ஒன்றாக நடிப்பதிலையோ அதேப்போல் சூர்யா, விக்ரம் சேர்ந்து நடிப்பதில்லை. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா சுமார் 10 மாதங்களுக்கு மேல் நடித்து வரும் படம் கங்குவா இந்த படம் சில பனியின் காரணமாக ஏப்ரலில் வெளியாக திட்டமிட்டனர். அந்த வகையில் தங்கலான் படம் அங்கு வந்ததால் கங்காவுக்கு தொய்வு ஏற்பட்டுள்ளது.
தங்கலான் படம் ஏப்ரல் வந்ததை பார்த்து சூர்யாவின் கங்குவா படம் ஏப்ரலில் வெளியாகாமல் மே மாதம் அல்லது ஜூன் மாதத்துக்கு தள்ளிப் போய் விடும் என்றும் சியான் ரசிகர்கள் சூர்யா ரசிகர்களை சீண்டி வருகின்றனர். பிதாமகன் படத்தின் பிறகு எந்த படத்திலும் ஒன்று சேரவில்லை வெகு நாட்களாவே சூர்யா ரசிகர்களும் விக்ரம் ரசிகர்களும் சண்டை போட்டு வருகின்றனர். இரண்டு படமும் தமிழர்களின் முந்தைய காலத்தில் வாழ்ந்தது போல் சித்தரிக்கப்பட்டவை ஆகும். எது எப்படியோ அவர்கள் சம்பாதித்து போய்விடுவார்கள் ரசிங்கர்கள் தான் இங்கு சண்டை போட்டு வருகின்றனர் எனவும் பேசப்படுகிறது.