தமிழ் திரையுலகில் தல என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார், தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்கும் அஜித் வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் நடிகையாக திரிஷா நடித்து வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தில் அதன் பின் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு திரிஷா அஜித்துடன் மீண்டும் இணைந்துள்ளார். படத்தில் அஜித் நடிக்கிறார் என்ற தகவல் மட்டுமே வெளியானது. எதை நோக்கிய கதைக்களம் என்ற தகவல் ஏதும் வெளியாகவில்லை.
படத்தில் அஜித் நடிக்கிறாரா இல்லை வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிட்டாரா என்பது தெரியவில்லை, ஏன் என்றால் குடும்பத்துடன் வெளிநாடு சென்ற அஜித் ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடடிக்க அஜித் வெகு மாதம் எடுத்து கொள்ளவார் அப்படி தான் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான துணிவு படத்திற்கு பிறகு காமிட்டான படம் தான் விடாமுயற்சி இது சுமார் 10 மதத்திற்கு பிறகு அஜித் கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார். ஆரம்பத்தில் விக்னேஷ் சிவன் கமிட்டான நிலையில் அஜித் மகிழ் திருமேனியுடன் நடிக்க ஒப்பந்தமாகினார். 62வது படத்தில் நடிக்கும் அஜித் அடுத்த படத்தில் நடிக்க தேர்வாகியுள்ளார். விடாமுயற்சி படத்தில் நடிக்கும்போதே தனது அடுத்த அதாவது 63வது படத்தை முடிவெடுத்துவிட்டார்.
இந்த படத்தை ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கில் பெரிய பட்ஜெட்டுகளில் படங்களை இயக்கி வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என ஏற்கனவே செய்தி வெளியானது. இந்நிலையில், இப்படம் பற்றிய சில முக்கிய அப்டேட்டுகள் இப்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவில் அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் துவங்கவுள்ளது. 2025ம் வருடம் பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
மேலும், இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் எனவும், நடிகை தபு இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதத்தை தாண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது. விடாமுயற்சி முடித்தவுடன் அஜித் அடுத்த படத்தில் உடனடியாக நடிப்பார் என தெரிகிறது. இந்த அப்டேட் வந்தவுடன் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து என்று கொண்டாட தொடங்கியுள்ளனர். மேலும், விடாமுயற்சி தொடங்கவே ஒரு வருடம் ஆகிவிட்டது இப்போது அடுத்த படம் அப்டேட் வந்ததெல்லம் ஓகே அதற்கு நடிக ஒத்துழைப்பாரா இல்லை பைக் எடுத்துக்கிட்டு வேறு நாட்டிக்கரு பயணத்தை தொடர்வாரா என தெரியவில்லை என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.