Tamilnadu

#BREAKING திருமாவளவன் காதலை பயன்படுத்தி எத்தனை கோடி பறித்தார் பகிர் தகவலை வெளியிட்ட வழக்கறிஞர் ரத்தினம்!

thirumavalavan and rathinam
thirumavalavan and rathinam

கண்ணகி முருகேசன் இருவரும் கண்ணகி குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டது உண்மை எனவும் இந்த விவகாரத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் 18 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கியது, இதில் 18 ஆண்டுகள் இந்த வழக்கில் சட்ட போராட்டம் நடத்திவந்த வழக்கறிஞர் இந்த வழக்கு தொடங்கியது முதல் தீர்ப்பு வந்தவரை என்ன நடந்தது என்ற பகிர் தகவலை தனியார் யூடுப் சேனல் ஒன்றிற்கு பேட்டியாக அளித்து இருக்கிறார்.


அதில் திருமாவளவன் கட்டபஞ்சாயத்து நடத்தி கொலை செய்தவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வழக்கை வாபஸ் பெற செய்ய முயற்சித்தான் எனவும் இதுபோல் பல இடங்களில் கட்ட பஞ்சாயத்து செய்து பணத்தை பறிப்பதுதான் திருமாவளவன் வேலை எனவும் வெளிப்படையாக தெரிவித்தார், கண்ணகி முருகேசன் வழக்கை பொறுத்தவரை தொடக்கம் முதல் இறுதி வரை வாதாடியவர் என்ற அடிப்படையில் வழக்கறிஞர் ரத்தினம் சொல்வது உண்மையாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் திருமாவளவன் இது போன்ற தன்னை நம்பிய சமூகத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் உண்மையாக இல்லாமல் பணத்தை பறிப்பதும் குறிப்பாக பெண்களின் காதல் விளையாட்டை பயன்படுத்தி பணத்தை பறிப்பது குறித்து பல்வேறு புகார்கள் பல ஆண்டுகளாக இருந்துவந்த நிலையில் இப்போது இரட்டை கொலை வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் ஒருவரே திருமாவளவனின் உண்மை முகம் என்னவென்று வெளி உலகிற்கு சொல்லி இருப்பது கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

எதற்கு எடுத்தாலும் பாஜக பாமக மீது பழியை போட்டு தங்கள் சமூக மக்களை பகடை காயாக மாற்றி அவர்களின் வாழ்வை சீரழித்து திருமாவளவன் மட்டும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது எந்த வகையில் நியாயம் என கண்ணதாசன் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வாதடிய வழக்கறிஞர் ஒருவரே திருமாவளவன் குறித்து பொது வெளியில் தகவலை தெரிவித்த நிலையில் எந்த ஊடகமும் அமைதி காக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏன் எனவும் பல்வேறு தரப்பிலும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திருமாவளவன் குறித்து வழக்கறிஞர் குற்றம் சுமத்தியது மற்றும் கண்ணகி முருகேசன் கொலை வழக்கில் முழுவதும் என்ன நடந்தது என்பது குறித்து வழக்கறிஞர் ரத்தினம் பேசிய முழுமையான வீடியோ பார்க்க கிளிக் செய்யவும் .