நடிகை சுதாசந்திரன் உறுக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் தனது செயற்கை கால்களை அடிக்கடி கழட்டி விமான நிலையத்தில் சோதனை செய்வது மிகவும் வேதனையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பல்வேறு இந்திய மொழி திரைப்படங்களிலும், சின்னத் திரை தொடர்களிலும் நடித்தவர் சுதா சந்திரன் மும்பையிலுள்ள மித்பாய் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பையும், அதன் பிறகு எம்.ஏ. பொருளியல் படிப்பையும் முடித்து பட்டம் பெற்றார். 1981-ம் ஆண்டு புனித யாத்திரை மேற்கொண்டபோது இவர் பயணம் செய்த வாகனம் திருச்சிராப்பள்ளி அருகே விபத்துக்குள்ளானது.
காயமடைந்த சுதா சந்திரனின் வலது காலின் ஒரு பகுதி அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கம் செய்யப்பட வேண்டியிருந்தது. இருப்பினும் அவர் நடனக் கலையை கைவிடவில்லை. விபத்தைத் தொடர்ந்து காலினை இழந்த பின், ஜெய்பூரில் செயற்கைக் காலை பொருத்திய பிறகு இவர் தொடர்ந்து நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஐரோப்பா, கனடா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். உலகின் பல்வேறு நகரங்களுக்கு சென்று வந்திருந்தாலும் தன்னை கவர்ந்த அமைதியான நகரம் சென்னை என்றார் சுதா சந்திரன்.
இவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் அதில். ”பாதுகாப்பு சோதனைகளுக்காக எப்போதும் எனது செயற்கை கால் விமான நிலைய அதிகாரிகளால் அகற்றப்படுவது அவமானமாகவும் வேதனையாகவும் உள்ளது. ஒவ்வொரு முறையும் செயற்கை காலை அகற்றுவது வாட்டி வதைத்து வலியைக் கொடுக்கிறது. எனது செயற்கை காலுடனேயே பல நாடுகளிலும் நடனமாடி நாட்டை பெருமைப்படுத்துகிறேன்.
ஆனால், விமான நிலைய அதிகாரிகளிடம் செயற்கை காலை சோதனைக்காக காட்டவேண்டியிருக்கிறது. வயதானவர்களுக்கு இருப்பதைப்போல எங்களுக்கும் ஒரு அட்டைக் கொடுங்கள். எனது செய்தி மத்திய மாநில அரசு அதிகாரிகளுக்கு சென்றடையும் என்று நம்புகிறேன்” என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
உங்கள் கோரிக்கையை நிச்சயம் பிரதமர் நிறைவேற்றுவார் என பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.