தனியார் ஊடகத்தில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் திமுக சார்பில் கலந்துகொண்ட பங்கேறப்பாளர் மற்றும் எழுத்தாளர் இடையே நடைபெற்ற காரசார விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது இதில் இருவருக்கும் இடையே சமரசம் செய்ய முயன்ற நெறியாளர் சுகிர்தா எழுத்தாளரை நோக்கி மேலும் கேள்விகள் வைக்க அவர் கொடுத்த பதிலால் விழி பிதுங்கி நின்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
ஊடகத்தில் விவாதத்தில் கலந்துகொண்ட எழுத்தாளர் பிரபாகரன் சமீப காலமாக திமுகவினர் மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறினர் ஆனால் உண்மையில் திமுக அரசின் சமீபத்திய செயல்பாடுகளை பார்க்கின்ற போது மனநிலை குன்றிய அரசாக செயல்படுகிறதோ என்றுதான் பார்க்க தோன்றுகிறது என தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவின் சபாபதி மோகன் எப்படி எங்களை பார்த்து மனநிலை குன்றிய அரசு என சொல்லலாம் உடனடியாக பிரபாகர் மன்னிப்பு கேட்கவேண்டும் என தெரிவித்தார், இதற்கு பதில் அளித்த பிரபாகர் அதெல்லாம் முடியாது உங்கள் மிரட்டல் உருட்டல் எல்லாம் வேறு எங்காவது வைத்து கொள்ளுங்கள் நான் இதற்கெல்லாம் மசிக்கின்ற ஆள் இல்லை என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நெறியாளர் சுகிர்தா இருவரும் அமைதிகாக்கவும் என தெரிவித்தார்.
இதற்கிடையில் ஏன் திமுக அரசு மனநிலை குன்றிய அரசு என நான் நினைப்பதாக பிரபாகர் மூன்று விளக்கங்களை அளித்தார் அப்போது ஆளும் அரசிற்கு ஆதரவாக சுகிர்தா கேள்வி எழுப்ப அதற்கு பிரபாகர் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பிறகு பார்க்கலாம் என தெரிவிக்க அதற்கு ஆட்சேபனை தெரிவித்த சுகிர்தா இது போன்ற பழமொழியை பயன்படுத்தலாமா என கேட்க.,
அதனை மக்கள் முடிவு செய்து கொள்வார்கள் நான் பேசியது சரியா தவறா என மற்றொரு பதிலடி நெறியாளருக்கு கொடுத்தார் பிரபாகர் இந்த வீடியோ இணையத்தில் தற்போது படு வைரலாக பரவி வருகிறது, மொத்தத்தில் திமுக பங்கேற்பாளர் மட்டுமின்றி நெறியாளரும் வாங்கி கட்டிய சம்பவங்களும் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.