Tamilnadu

சற்றுமுன்! எல்லாத்தையும் செய்தது நான் தான்.. மீண்டும் அதிரடி கிளப்பிய ராஜேந்திர பாலாஜி..!

Rajendra Balaji
Rajendra Balaji

சென்ற அதிமுக ஆட்சியின் போது திமுக-வை எதிர்த்தும், ஸ்டாலினை எதிர்த்தும் பல்வேறு கருத்துக்களை  முன்வைத்தார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அதுமட்டுமல்லாமல் இவர் பேசும் வார்த்தைகள் அனைத்தும் விமர்சனத்திற்கு உள்ளானது. அப்போதே இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களை கட்டாயம் சட்டத்தின் முன் நிற்க வைத்து ஜெயிலில் தள்ளுவோம் என்றே  தெரிவித்து இருந்தார்ஸ்டாலின். 


தற்போது திமுக ஆட்சி என்பதால், எப்படியும் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பாயும் என்றே   எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றவாறு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடியே பத்து லட்சத்தை ஏமாற்றியதாக எழுந்த விவகாரத்தில், கடந்த நவம்பர் மாதம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்தது.

இதனை தொடர்ந்து முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி இருந்த நிலையில், ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவதற்கான பணிகளில் ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் ஈடுபட்டிருந்தனர். ஓரிரு நாள்களில் ஜாமீன் கிடைக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில் கர்நாடகாவில் உள்ள ஹாசன் என்ற பகுதியில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனாலும், சில நாட்கள் மட்டுமே விசாரணையில் இருந்த அவர் மீதான சில வழக்குகளை நீதிமன்றம்   தள்ளுபடி செய்தது. இப்படி ஒரு நிலையில், வரும் நகர்புற  உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி கேட்டுக்கொண்டார்.

அப்போது தான் தொண்டர்கள் முன்னிலையில் அதிமுக ஆட்சியில் செய்த சாதனை குறித்தும், சென்ற சட்டமன்ற தேர்தலில் தான் நின்ற ராஜபாளையம் தொகுதி மக்களுக்கு செய்த நல்ல விஷயங்களை பற்றியும் எடுத்துரைத்தார்.

அப்போது, ராஜபாளையம் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது, தார் சாலைகள், சிமெண்ட் சாலைகள், மருத்துவமனை மேம்பாடு, மேம்பாலம் கட்டியது, கூட்டு குடிநீர் திட்டம் கொன்டு வந்தது எல்லாமே, அதிமுக ஆட்சியில் தான். அதற்காக 60 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தது. நடுவுல கொரோனா என்பதால் வேலைகள் நடைப்பெறாமல் இருந்தது. தற்போது மீண்டும் பணிகள் தொடங்கி உள்ளது.

ஆனால் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பணிகள் தான் இப்போது மீண்டும் நடந்து வருகிறது. ஆனால் திமுக ஆட்சியில் செய்வது போல இவர்கள் பிம்பத்தை காண்பிக்கின்றனர். ராஜபாளையத்தில் அரசு கண் மருத்துவமனை கொண்டு வந்து, 2 ஆம்புலன்ஸ் வண்டியும் அரசு தரப்பில் வழங்கப்பட்டது.

ராஜ பாளையம் இன்று தண்ணீர் குறைபாடு இல்லாத நகரமாக மாறி உள்ளது என்றால் அதற்கு காரணம் அதிமுக  தான். இவை அனைத்தையும் நான் அமைச்சராக இருந்த போது கொண்டு வந்தது. இதனை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து, ஓட்டு கேளுங்கள் என தெரிவித்து உள்ளார் ராஜேந்திர பாலாஜி.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ராஜேந்திர பாலாஜி பேசி உள்ளதால், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.