நகர்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழலில் தற்போது அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர், ஆளும் கட்சியான திமுக அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது முக்கியமாக கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற ரீதியில் களப்பணியாற்றிவருகிறது.
எதிர்க்கட்சியான அதிமுகவும் கட்சியிலுள்ள கடைக்கோடி தொண்டனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதால் தனித்து போட்டியிடும் முடிவில் நின்று தற்போது தனித்து போட்டியிடுகிறது, இது ஒருபுறம் என்றால் பாஜக செயல்பாடு அரசியல் கட்சிகளை தாண்டி பத்திரிகையாளர்கள் மத்தியிலும் வியப்பை உண்டாக்கியுள்ளது.
தனித்து போட்டி என்ற முயற்சியில் களம் இறங்கிய பாஜக அதிமுக முறையான சீட் வழங்காத காரணத்தால் அந்த வாய்ப்பை அடைந்ததாக கூறப்பட்டது ஆனால் தற்போது பாஜக செயல்படும் விதமும் வேட்பாளர்களை தேர்வு செய்த விதமும் திராவிட கட்சிகளான திமுக அதிமுக இரண்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுக பாஜகவை தனித்து போட்டியிட வைத்து அதன் வாக்கு வங்கியை அதிகரித்து கொள்ள வாய்ப்பை உண்டாக்கி விட்டதாகவும் குறைந்தது பாஜக 7% வாக்குகளை வாங்கினால் அதன் பலம் வரும் காலங்களில் 15-21% வாக்குகள் வரை அதிகரிக்கும் என்று உளவுத்துறை முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை கொடுத்துள்ளது.
இதையடுத்துதான் முதல்வர் ஸ்டாலின் பாஜகவை விமர்சனம் செய்யாமல் நேரடியாக வழக்கம் போல் அதிமுகவை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளார் எனவும் தற்போது நகர்புற உள்ளாட்சி களத்தை திமுக அதிமுக என்ற ரீதியில் மாற்ற முயன்று வருகிறார் என்ற தகவல்கள் தெரியவந்துள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பாடுகள் களத்தில் மிக பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளது என முதல்வரிடம் பல பத்திரிகையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
நீங்கள் மத ரீதியாக சிறுபான்மை சமூகத்திற்கு ஆதரவு தெரிவிக்க தெரிவிக்க இந்துகள் வாக்கும் நடுநிலையான இந்துக்கள் வாக்கும் பாஜகவிற்கு செல்லும் என்றும் தமிழக உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளது, இதையடுத்து திமுகவினருக்கு எங்கும் இந்து மதம் குறித்தோ அல்லது மத ரீதியாக வாக்குகள் உருவாகும் வண்ணம் பேசவோ சமூக வலைத்தளங்களில் முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என வாய்மொழி உத்தரவு தலைமையிடம் இருந்து வந்துள்ளதாம்.
மொத்தத்தில் நகராட்சி தேர்தல் முடிவுகள் பாஜக என்ன தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதில் இருந்து தமிழக அரசியல் களம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்க படுகிறது. தகவல் -உதயகுமார் செந்தில்வேல்