Politics

எத்தனை இடங்கள் கிடைக்கும் தேர்தலுக்கு பிறகு மத்திய உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!! பாஜக ஹாப்பி!!

எத்தனை இடங்கள் கிடைக்கும் தேர்தலுக்கு பிறகு மத்திய உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!! பாஜக ஹாப்பி!!
எத்தனை இடங்கள் கிடைக்கும் தேர்தலுக்கு பிறகு மத்திய உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!! பாஜக ஹாப்பி!!

தமிழக சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமைதியான முறையில் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது, அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, நாம் தமிழர், மக்கள் நீதிமய்யம் என ஐந்து முனை போட்டி இந்த தேர்தலில் எதிரொலித்தது.


கடந்த தேர்தலை காட்டிலும் குறைவான வாக்கு சதவிகிதம் பதிவாகி இருப்பது எதிர்கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, சென்னையில் மிக மிக குறைவான வாக்கு சதவிகிதம் பதிவாகி இருப்பது குறிப்பாக திமுகவிற்கு மேலும் பின்னடைவை கொடுக்கலாம் என கூறப்படுகிறது, அதிமுக பாஜக கூட்டணி மீதான எதிர்ப்பு வாக்குகள் திமுக கூட்டணிக்கு நேரடியாக செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த நிலை மாறியுள்ளது களத்தில் எதிரொலிக்கிறது.

நாம் தமிழர், மக்கள் நீதிமய்யம் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணிக்கு செல்ல கூடிய வாக்குகளை பிரித்திருப்பது முழுமையாக திமுகவிர்கான வெற்றி வாய்ப்புகளில் தொய்வினை உண்டாக்கலாம் எனவும் தென் மாவட்டங்களில் அமமுக கணிசமான வாக்குகளை பிரிப்பதால் அதிமுக கூட்டணிக்கு சிக்கலை உண்டாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை முதல் பதிவான வாக்குகள் அடிப்படையில் நேற்றைய தினமே பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் மத்திய உளவு அமைப்புகள் வாக்காளர் மனநிலை குறித்த தகவலை கண்டறிந்துள்ளனர் இதன் அடிப்படையில் வெற்றி தோல்வி நிலவரம் குறித்து எண்ணிக்கை குறித்த தகவல் மேலிடத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் பாஜக, கோவை தெற்கு, திருநெல்வேலி, நாகர்கோவில், அரவக்குறிச்சி, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது எனவும்,

துறைமுகம்,மொடக்குறிச்சி, ஆயிரம் விளக்கு, ஆகிய இடங்களில் வெற்றி தோல்வி விகிதம் எந்த பக்கமும் மாறலாம் எனவும் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, தொடர்ந்து தாமரை சின்னத்தை கிராமங்கள் வரை கொண்டு செல்ல இந்த தேர்தல் கை கொடுத்துள்ளதாகவும், இதற்கான பலன் 2024 ம் ஆண்டு முழுமையாக இருக்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

விரைவில் தமிழகத்தில் தாமரை மலரும் மலரும் என பாஜகவினர் பிரச்சாரங்களில் தெரிவித்து கொண்டு இருக்க, இந்த முறை 5 இடங்களுக்கு குறையாமல்  தாமரை மலரும் என்ற செய்தி பாஜகவினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.