தற்போது தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற அளவிற்கு பேசப்படும் ஹீரா தளபதி விஜய் இவர் நடித்த கடந்த வாரம் வெளியான படம் லியோ இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேர்ப்பை பெற்றாலும் விமர்சனங்கள் நெகட்டிவாக பேசப்பட்டு வருகிறது.லியோ படத்தில் திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாவதற்கு முன் பல வகையில் சிக்கல்களை சந்தித்தது நாம் அறிந்த ஒன்றே. இந்த படத்திற்கான சர்ச்சைகள் அனைத்தும் விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறியதால் தான் சர்ச்சை கிளம்பியது.
அதன்பின் ஒருவழியாக 19ம் தேதி லியோ படம் வெளியானது. இதனை கண்ட ரசிகர்கள் எதிர்பார்த்ததை பூர்த்தி செய்யவில்லை என்ற கருத்தை முன் வைத்து வந்தனர்.ஆரம்பகாலகட்டத்தில் விஜய் நடிப்பதற்கு முன் கதையை விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான் இயக்குனரிடம் கேட்டு விஜயை நடிக்க ஒப்புக்கொள்வாராம். அந்த வகையில் படம் ஹிட் அடிக்கும். தற்போது விஜய் தனது தந்தையிடம் கதையை கேட்டு நடிக்காமல், விஜயே கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொள்வார். மேலும் கதை நன்றாக இருக்கும் பட்சத்தில் சில மாற்றங்களை தனக்கு ஏற்றாற்போல் மாற்றிஅமைத்து நடிக்க இயக்குனரிடம் அனுமதி கேட்பார்.
இந்நிலையில் விஜய் நடித்து வெளியான படம் லியோ விஜய் தான் லோகேஷ் கனகராஜியிடம் கதையை கேட்டு நடித்தார். ஆனால் படத்திற்கு ரசிகர்கள் தெலுங்கு படத்தை போன்று உள்ளதாக இணையத்தில் விமர்சனத்தை முன்வைத்தனர். முன்னதாக தெலுங்கு பட இயக்குனர் விக்ரம் குமார் தான் இயக்கிய 24 திரைப்படத்தின் கதையை முதலில் விஜயிடம் கூறினார். அப்போது விஜய் கதையை கேட்டு விட்டு பிறகு சொல்வதாக கூறி விட்டு, விக்ரம் குமார் இயக்கிய படங்களை பார்த்து விட்டு நன்றாக இருப்பதாக கூறினார். ஆனால், 24 பட கதையில் சிறிய மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும் என விஜய் விக்ரம் குமாரிடம் கூற அதற்கு மறுப்பு தெரிவித்தாராம் இயக்குனர் அதனால் விஜய் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.
அதன்பிறகு நடிப்பின் நாயகன் சூர்யா இந்த 24 பட கதையை கேட்டு விட்டு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அந்த படம் சூர்யாவுக்கு தோல்வியை ஏற்படுத்தி கொடுத்தது. ஆகையால் விஜய் தான் நடிக்கும் கதையில் உஷாராக இருக்கும் விஜய் லியோ படத்தை எப்படி கோட்டை விட்டார் என்று சினிமா வட்டாரங்கள் கிசுகிசு-கின்றனர். எது எப்படியோ அடுத்த படத்தின் கதையை நன்றாக கேட்டு நடித்து அரசியல் வரும்படி விஜய்க்கு ரசிகர்கள் கோரிக்கையை வைத்து வருகின்றனர். தற்போது விஜய் தளபதி 68ல் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார், இந்த படத்தின் அப்டேட் ஏதும் வரவில்லை பார்ப்போம் இந்த முறை விஜய்க்கு காதலி எப்படி அமையுது என்று ரசிகர்கள் இப்பொது லியோவை ஓரம் கட்டிவிட்டு தளபதி 68ஐ பேச ஆரம்பித்துள்ளனர்.