Tamilnadu

நான் யாரையும் காயப்படுத்த சொல்லலை டயரை நோக்கி வருகிற நாய் "யாரு" அண்ணாமலை கிண்டல் ?

annamalai
annamalai

ஊட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் குறிப்பாக திமுகவை மறைமுகமாக நாய் என அவர் விமர்சனம் செய்து இருப்பது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.


அண்ணாமலை பேசியதாவது :"மமதா பானர்ஜியோடு சேர்ந்து அணி அமைப்போமா (பிரதமர் ஆவோமா?) என்று முதலமைச்சருக்கு கவலை. அதனால் தான் எந்த ஒரு தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் எப்போதும் மத்திய அரசை வம்புக்கிழுத்துக் கொண்டிருப்பார். ரோட்டில நாய் இருந்துச்சுன்னா, கார் ஏதும் போச்சுன்னா, வவ் வவ் வவ்வுன்னு டயரை பார்த்து ஓடி வரும்.

அந்த நாய்க்கும் ஏன் டயரை பார்த்து ஓடி வரோம்னு தெரியாது, கார்காரருக்கும் தெரியாது. தமிழகத்தை பொறுத்தவரை, மத்திய அரசு பாட்டுக்கு கார்ல போய்க்கிட்டிருக்கும். நான் யாரையும் நாய்ன்னு சொல்லலை (சிரிக்கிறார். கூட்டத்தில் கரகோஷம்). மத்திய அரசு, மோடி அவர்கள், அவர் பாட்டுக்கு வேலையை செஞ்சுட்டு  கார்ல போய்க்கிட்டிருக்கிறார்.

டயரை பார்த்து டயரை பார்த்து ஓடி வராங்க... யாருன்னு நான் சொல்லலை. நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.... (தமிழகத்தில்) ஆட்சியில் இருக்கக் கூடியவர்கள் தினமும் மத்திய அரசை வம்புக்கிழுத்து, பொய்யைப் பேசி, புரட்டைப் பேசி, அதன் மூலமாக அரசியல் செய்து, அதன் மூலமாக மக்களுடைய ஓட்டை வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். அது தப்புக் கணக்கு. கூட்டிக் கழிச்சுப் பார்த்தா, இவரு போடற 97 ப்ளஸ் 8 கணக்கு தான் வரும் என கிண்டல் அடித்துள்ளார் அண்ணாமலை.

அண்ணாமலை இதுநாள் வரை இதுபோன்று கடுமையான விமர்சனத்தை வைக்காத சூழலில் தற்போது கடுமையான விமர்சனத்தை திமுகவை நோக்கி வைத்து இருப்பதும் குறிப்பாக நாய் என விமர்சனம் செய்து இருப்பதும் இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

More Watch Videos