ஹிஜாப் விவகாரம் பூதாகரமாக சென்றுள்ள நிலையில் பல பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர், பள்ளியில் மாணவர்கள் பாடம் படிக்க செல்கிறார்களா? இல்லை மதத்தை தூக்கி பிடிக்க செல்கிறார்களா என்ற பல்வேறு கேள்விகள் எழுப்ப பட்டன நீதிமன்றமும் கர்நாடக அரசின் முடிவிற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்த விவகாரமே பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்க தற்போது மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகிறது அதில் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் நர்ஸ் போன்றவர்கள் தாடியுடன் மருத்துமனையில் பணியாற்ற கூடாது காரணம் தாடி இருந்தால் நோயாளிகளுக்கு நோய் தொற்றும் என்ற அபாயம் இருப்பதாக மருத்துவமனை விளக்கம் கொடுத்துள்ளது.
இதில் ஒரு இஸ்லாமியர் மட்டும் தாடியை எடுக்க மாட்டேன் என கூறியதுடன் மருத்துமனை நிர்வாகம் குறித்து இஸ்லாமிய அமைப்புகளுடன் புகார் தெரிவித்தார் இந்த சூழலில் தான் மருத்துமனைக்கு ஒருவர் போன் செய்து கேட்க மருத்துமனை நிர்வாகமோ கடுமையான முறையில் பதிலடி கொடுத்துள்ளது.
மருத்துவ மனைக்கு என்று ஒரு சட்டம் இருக்கிறது இங்கு அனைவரும் சமமாகதான் வரவேண்டும் ஒருவர் மட்டும் மதிக்க மாட்டேன் என சொல்வது எந்த வகையில் நியாயம் சொல்லுங்கள், நாளை இங்கு முஸ்லீம் பணியாளர்கள் புர்கா அணிந்து வரவேண்டும் என்று போராட்டம் நடத்தினால் என்ன நடக்கும் "இங்கு மதம் எப்படி வந்தது என டோஸ் கொடுத்தார்.
இந்த வீடியோ எப்போது எடுத்தது என தெரியவில்லை ஆனால் தற்போது கர்நாடக மாநிலத்தில் புர்கா விவகாரம் என்றால் இப்போது மருத்துவமனையில் தாடி விவகாரம் என கடுமையாக கண்டனங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இப்படி பொது இடங்களில் எல்லாம் மோதல் போக்கில் ஈடுபட்டால் இது போன்ற நபர்களால் நாளை பல இஸ்லாமிய மக்களை தனியார் நிறுவனங்கள் பணியில் சேர்க்க தயக்கம் காட்டும் சூழல் உண்டாகலாம் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் .வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது