தமிழக முதல்வர் ஸ்டாலின் புது சிக்கலில் சிக்கி இருப்பதாக எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார் அது பின்வருமாறு :- திமுக தலைவரான முக ஸ்டாலினாருக்கு நேரம் சரியில்லை, ஜாதகத்தில் ஏதோ ஒரு கிரகம் முழுவதும் தலைகீழாக சுழல தொடங்கிவிட்டது
மேற்குவங்க கவர்னரிடம் அவர் டிவிட்டர் கொட்டு வாங்கிய நிலையில் அடுத்த அடியினை அடிக்கின்றார் மம்தா பானர்ஜி, ஆம் , பாஜகவிற்கு எதிராக ஒரு கூட்டணி அமைக்கபடும், அது "டெல்லிக்கு வெளியே" அமைக்கபடும் என சூளுரைத்தார் முக ஸ்டாலினார்
கல்கத்தா, சென்னை, ஐதரபாத் என எல்லா நகரமும் டெல்லிக்கு வெளியேதானே இருக்கின்றது? ஒருவேளை பாகிஸ்தானில் போய் ஆலோசிப்பார்களோ? என யோசித்து கொண்டது பாஜக தரப்பு, இந்நிலையில் ஸ்டாலினார் அழைக்கும் கூட்டணிக்கு காங்கிரஸ் வரகூடாது அவர்களுக்கு இடமில்லை என போர்கொடி தூக்குகின்றார் மம்தா பானர்ஜி
இது திமுகவுக்கு சிக்கலான நேரம், சும்மா இருந்த சங்கை ஊதிகெடுத்த கதை, தேசிய அளவில் காங்கிரஸ் திமுகவுக்கு முக்கியம் அது அல்லாத அணியினை தேர்ந்தெடுத்தால் பல குழப்பங்களை அக்கட்சி தமிழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கொடுக்கும் இப்பொழுது காங்கிரஸ் வேண்டும் என திமுக சொன்னால் மம்தா வெளியேறுவார், மம்தா வந்தால் காங்கிரஸ் வரமுடியாது.
ஆக சிக்கலை தீர்க்கபோகின்றேன் என சொல்லி புதுகுழப்பத்தில் சிக்கியிருக்கின்றது திமுக தரப்பு, நாம் முன்பே சொன்னபடி தேசிய அரசியல் இப்படித்தான் இருக்கும், அங்கு கூட்டணி அமைக்கின்றேன் நானே சூத்ரதாரி என கிளம்பிய பலர் சந்திரபாபு நாயுடு போல பலர் இன்று எங்கு இருக்கின்றார்கள் என்பதே தெரியவில்லை
இப்பொழுது திமுக சிக்கியிருக்கின்றது இதை திமுக எப்படி எதிர்கொள்ளும் என தெரியாது, விஷயத்தை கேள்விபட்டதும் இளங்கோவன், கே.எஸ் அழகிரி , ஜோதிமணி என எல்லோரும் கண்களை உருட்டுகின்றனர், தேசிய கூட்டாஞ்சோறு பொங்க போகின்றோம் என கிளம்பிய திமுக, தொடக்கத்திலே சட்டியினை காலில் போட்டு சத்தம் போட்டு அழமுடியாமல் அமர்ந்திருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார் ஸ்டான்லி ராஜன்.
More Watch Videos