தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், மாநகராட்சிகளுக்கு 1,347 வார்டு உறுப்பினர்களும், நகராட்சிகளுக்கு 3,843 உறுப்பினர்களும், பேரூராட்சிகளுக்கு 7,621 வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வரும் 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. களத்தில் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 11,196 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 17,922 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 28,660 பேரும் போட்டியிருகின்றனர். தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர்களும் நூதன முறைகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சிவி சண்முகம் மேடையில் பிரச்சாரம் செய்தார் அப்போது திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார் இந்த சூழலில் சிவி சண்முகம் பேசிக்கொண்டு இருக்கையில் திமுகவை சேர்ந்த ஒருவர் சண்முகத்தை நோக்கி குரல் கொடுத்தார், இதனால் ஆத்திரம் அடைந்த சண்முகம், "போடா டேய்" உன்னை போல் பல பேரை பார்த்து இருக்கேன் போயி பொன்முடியை வர சொல், உன் தலைவன் ஸ்டாலினை வரச்சொல் என கூறினார்.
மேலும் ஏய் காவல்துறையே நீ ஏவல் துறையாக மாறிவிட்டாயா எனவும் கடுமையாக விமர்சனம் செய்தார், அத்துடன் உனது பொன்முடிக்கோ அல்லது ஸ்டாலினுக்கோ தைரியம் இருந்தால் வர சொல்லு என வண்ட வண்டயாக விமர்சனம் செய்தார் இதனை அதிமுக தொண்டர்கள் கைதட்டி வரவேற்றனர். சிவி. சண்முகம் பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.