மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய விவமகரம் திரையுலகில் சர்ச்சையாக மாறியது. இதனையெடுத்து தன் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தி விட்டனர் என கூறி நஷ்ட ஈடு வேண்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் மன்சூர் அலிகானுக்கு அபராத தொகை விதித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் நெட்டிசன்கள் மன்சூர் அலிகானை சரமாரியாக கலாய்த்து வருகின்றனர்.
அக்டோபர் மாதம் வெளியான லியோ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த திரிஷா, அந்த படத்தில் மன்சூர் அலிகான் சிறிய காதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதில் விஜயின் முந்திய வாழ்கை வரலாறு காட்சி சொல்வது போல் இவருடைய காதாபாத்திரம் இருக்கும் இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் லியோ படத்தில் திரிஷா உடன் பெட் சீன்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன் என்பது போல் கூறினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகை திரிஷாவும் இவரை போன்றவர்கள் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு சிரஞ்சீவி போன்ற திரை பட்டாளங்களும் திரிஷாவுக்கு ஆதரவாகவும் மன்சூர் அலிகானுக்கு எதிராகவும் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது மன்னிப்பு தெரிவிப்பதாக கூறிய மன்சூர் அலிகான், திரிஷாவும் மன்னிப்பது மனிதனில் இயல்பு தன்மை என தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மூவருக்கு சேர்த்து ஒரே மனுவாக வழக்கு தொடமுடியாது என்றும் கூறினர். மன்சூர் அலிகான் தரப்பு அவர் பேசியது தொடர்பாக வீடியோ சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் அவர்கள் மூவரும் இணையத்தில் தான் கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர் அதனை அவதூறு கருத்துக்களாக எடுத்து கொள்ள முடியாது.பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு என்றும், இதே விவகாரத்தில் மன்சூர் அலிகான் மன்னிப்பும் கோரியுள்ளார், உரிமையியல் நடைமுறை சட்டப்படி மூன்று பேருக்கும் எதிராக ஒரே நேரத்தில் வழக்கு தொடர முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார். நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டுமென மன்சூர் அலிகானுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.