சிகை அலங்காரம், அழகு குறிப்பு குறித்து யூடுப் சேனல் மூலம் குறிப்புகளை வெளியிட்டு தனது திறமையை வெளிப்படுத்தி வந்தவர், பத்மப்ரியா ஸ்ரீனிவாசன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய சுற்று சூழல் சட்டம் குறித்து தனது கருத்தை வீடியோவாக வெளியிட்டு பொதுமக்கள் இடையே பீதியை கிளப்பினார் பத்மப்ரியா.
அதையடுத்து தொடர் எதிர்ப்பு கிளம்ப தான் வெளியிட்ட வீடியோவை நீக்கினார், வழக்கம் போல் மத்திய அரசிற்கு எதிரான குற்றசாட்டு என்பதால், பாஜகவை எதிர்க்கும் கட்சிகள், சில அரசியல் விமர்சகர்கள், ஊடக துறையை சேர்ந்த சிலர் பத்மப்ரியாவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் பத்மபிரியா திடீர் என நடிகர் கமல்ஹாசனை சந்தித்து தன்னை மக்கள் நீதி மையத்தில் இணைத்து கொள்வதாக வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து அந்த கட்சியில் இணைத்து கொண்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் இதுநாள் வரை பத்ம பிரியா குறித்த தனிப்பட்ட தகவல்கள் ஏதும் பொது வெளியில் இல்லை.
ஆனால் மக்கள் நீதி மையம் சார்பில் மதுரவாயல் பகுதியில் பத்மப்ரியா வேட்பாளராக களமிறங்கியுள்ளார், இவர் தனது தேர்தல் பிராமண பத்திரத்தில் தனக்கு திருமணம் ஆனதாக குறிப்பிட்டுள்ளார், இந்த தகவல்கள் தான் பத்ம பிரியாவிற்கு கடும் சிக்கலை உண்டாக்கியுள்ளது, பத்ம பிரியா இதுநாள் வரை தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற தகவலை வெளிப்படையாக எந்த நேர்காணலிலும் கூறியது இல்லை.
திருமணம் ஆன தகவலை கூட பொதுவெளியில் வெளிப்படையாக கூறாத பெண்ணா வெற்றி பெற்றால் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் குறித்து வெளிப்படையாக பேசுவார் என இளைஞர்கள் அவரது சமூக வலைத்தள பக்கங்களில் கூட கருத்து பதிவிட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க பத்ம பிரியாவிற்காக தொகுதியில் பூத் ஏஜெண்டாக வந்த நபர்களும் பாதியில் திரும்பி சென்று இருக்கிறார்கள்.
அவர்களில் பலர் பத்மபிரியாவிடம் வெளிப்படை. தன்மை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர், இதையடுத்துதான் எனது கட்சிக்கு பூத் ஏஜெண்டாக பணியாற்ற ஆட்கள் தேவை என வீடியோ விளம்பரம் கொடுத்து ஆள் சேர்க்க முனைந்துள்ளார் பத்மபிரியா, ஆனால் தொகுதியில் 70 % இடங்களுக்கு தற்போதுவரை பூத் ஏஜென்ட் கூட கிடைக்காமல் இருக்கிறாராம்.
தேர்தல் நடைபெற 12 மணி நேரம் கூட இல்லாத நிலையில் பூத் ஏஜென்ட் கூட இல்லாத பரிதாப நிலைக்கு சென்றுள்ளார் பத்மபிரியா இதற்கு அவர் திருமணம் நடந்தது கணவர் சொத்து மதிப்பு குறித்து வெளிப்படைத்தன்மை இல்லாத காரணங்களே உண்மை என கூறப்படுகிறது, ஆன்லைலில் லைக் போடும் வேலை போன்று எளிதான வேலை தேர்தலில் நிற்பது என சிந்தித்து சிக்கலில் சிக்கியிருக்கிறார் பத்மபிரியா.