Politics

திமுகவிற்கு எதிராக விளம்பரம் வெளியிட்டவர்கள் இவர்கள்தானாம்!! தகவலை கசியவிடாமல் இருக்க என்ன செய்தார்கள் தெரியுமா?

திமுகவிற்கு எதிராக விளம்பரம் வெளியிட்டவர்கள் இவர்கள்தானாம்!! தகவலை கசியவிடாமல் இருக்க என்ன செய்தார்கள் தெரியுமா?
திமுகவிற்கு எதிராக விளம்பரம் வெளியிட்டவர்கள் இவர்கள்தானாம்!! தகவலை கசியவிடாமல் இருக்க என்ன செய்தார்கள் தெரியுமா?

சட்டமன்ற பொது தேர்தல் பிரச்சாரம் ஓய்வு பெரும் நேற்றைய தினம் காலை அனைத்து அச்சு ஊடகங்களிலும் ஒன்று போல் இதுவரை திமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற நில அபகரிப்பு, திமுகவினர் ரவுடிசத்தில் ஈடுபட்ட தகவல்கள், நீட் தேர்வு நாடகம், ஸ்டெர்லைட் ஆலை கொண்டு வர நடவடிக்கை, மீத்தேன் திட்டத்தில் கையெழுத்து போட்டது முதல்.


உதயநிதி ஸ்டாலின் அரசிலுக்கு வரமாட்டார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தது அதன் பிறகு உதயநிதி அரசியலுக்கு வந்த கதை என முதல் பக்கத்தில் செய்தி வடிவில் விளம்பரம் வெளிவந்தது, தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்றைய தினம் திமுக மீது மக்களுக்கு அச்சம் ஊட்டும் வகையில் செய்திகள் வெளிவந்தது தமிழக அரசியல் களத்தையே மாற்றியுள்ளது.

சொல்லிவைத்தாற்போல் அனைத்து பிரபல நாளிதழ்களிலும் முதல் பக்கத்தில் செய்திகள் வெளியானது, திமுக தலைமையை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, அனைத்து ஊடகங்களின் சிறப்பு எடிட்டர், முக்கிய நபர்கள் என அனைவரும் நம் பக்கம் இருக்க எப்படி நமக்கு தெரியாமல் செய்தி வடிவில் விளம்பரம் வெளியானது என கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது திமுக தலைமை.

இந்நிலையில் இந்த திட்டத்தில் பாஜக தேசிய தலைமை மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு மட்டும்தான் தகவல் தெரியுமாம், அசாம் மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு செய்தி வெளியிட்டது போன்று தமிழகத்திலும் அதே போன்று செய்தியை வெளியிட வேண்டும் என பாஜக தேசிய தலைவர்களில் முக்கியமானவர் தமிழகம் வந்தபோது ஊடக முதலாளிகளிடம் கேட்டு கொண்டுள்ளார்.

முதலில் பலர் சம்மதம் தெரிவிக்காத நிலையில் திமுக உடன் சில முக்கிய நிறுவனங்கள் செய்து கொண்ட தேர்தல் விளம்பரம் ஒப்பந்தம் குறித்து அக்குவேறு ஆணிவேராக ஆதாரத்தை கொடுக்க அப்போதே சிலர்  விளம்பரம் செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர், ஒரு அச்சு ஊடகம் மட்டும் முடியாது என்ற ரீதியிலும் இது ஊடக தர்மமல்ல என்று பேசி மழுப்பி இருக்கிறார்கள்.

அந்த நாளிதழ் ஆசிரியரிடம் எந்த அடிப்படையில் சீனாவின் வளர்ச்சி குறித்த விளம்பரத்தை செய்தி வடிவில் வெளியிட்டீர்கள் என எதிர் கேள்வி எழுப்ப சத்தமில்லாமல் ஒப்பு கொண்டுள்ளதாம், பிரிண்டிங் செய்வதற்கு ஒரு மணி நேரம் முன்பு வரை என்ன செய்தி என அச்சு ஊடகத்தில் பணிபுரியும் முக்கிய நபர்களுக்கே தெரியாதாம்.

படு கச்சிதமாக விளம்பரத்தை வெளியிட்டு திமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது, பட்டி தொட்டி எங்கும் திமுகவின் கடந்த கால அனுபவங்கள் மீண்டும் நினைவுப்படுத்தப்பட்டுள்ளது, இது தேர்தலில் கடும் தாக்கத்தை உண்டாக்கலாம் என்று கருதப்படும் நிலையில் திமுக தலைமை என்ன செய்வது என தெரியாமல் மிரண்டு போயுள்ளதாம்.

டிவி ஊடகங்களை திமுக கைப்பற்றிய நிலையில் இறுதியில் அச்சு ஊடகம் மூலம் பாஜக அதிமுக கூட்டணி பதிலடியை திமுக தலைமைக்கு கொடுத்துள்ளதாக ஊடக துறையில் பணியாற்றும் நபர்களே பேசிவருகின்றனர்.