Tamilnadu

முதல்வர் பழங்குடி பெண் "அஸ்வினி" சந்திப்பு என்ன முதல்வரே ? ..மூன்றே கேள்வி புட்டு புட்டு வைத்த மா.வெங்கடேசன் !

ma vengadesan and cm satlin
ma vengadesan and cm satlin

மத்திய அமைச்சர் பதவிக்கு நிகரான தேசிய துப்புரவு ஆணைய தலைவர் பதவியில் இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த மா.வெங்கடேசன்  இவர் தமிழகத்தில் நடந்துவரும் முக்கிய சம்பவங்கள் குறித்து தனது கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக  பதிவு செய்து வருபவர் அந்த வகையில்.,


பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த அஸ்வினி என்ற பெண் வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றதும் அதன் பின்னணியில் உள்ள விவகாரங்கள் குறித்தும் அழுத்தம் திருத்தமாக மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு :-

நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்த (?) சகோதரி அஸ்வினிக்கு நீதி மட்டுமல்ல சமத்துவமும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் சுயமரியாதையை பெற்று தந்துவிட்டோம் என்று (யுனோஸ்கோ விருது கதை மாதிரி) தினந்தோறும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

1. சகோதரி அஸ்வினிக்கு அநீதி இழைத்த கோயில் பணியாளரை நீக்கி அவர் மீது வழக்கு பாய்ந்திருக்குமானால் அதுவே அஸ்வினிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்தினருக்கும் கிடைத்திட்ட நீதியாக அமைந்திருக்கும். இதுபோல் செய்யக்கூடாது என்று பலருக்கும் பாடமாக இருந்திருக்கும். 

2. உங்களை கோயிலில் அமர்ந்து சாப்பிடக்கூடாது என்று தானே விரட்டிவிட்டார்கள். நீங்கள் என் வீட்டிற்கு வந்து சாப்பிடுங்கள். நான் உங்கள் வீட்டிற்கு வந்து சாப்பிடுகிறேன் என்று சொல்லி அதன்படி செய்திருந்தால்தான் சமூகநீதி மட்டுமல்ல, சுயமரியாதையை பெற்று தந்ததற்கு அர்த்தம்.

முதல்வர் அஸ்வினி வீட்டிற்கு சென்றார். அவர் வீட்டில் உள்ள டம்ளரில் தண்ணீர் அருந்தி, ஒருவேளை சாப்பிட்டிருந்தால் அதுவே அப்பெண்ணுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கே கிடைத்த சுயமரியாதையாக, சமூகநீதியாக இருந்திருக்கும். (இதுவரை அப்பெண்ணின் வீட்டில் முதல்வர் சாப்பிடும் புகைப்படம் எதுவும் வெளிவரவில்லை.)(உனக்கு சாப்பாடு இல்லை என்பதற்கும், உங்கள் வீட்டில் சாப்பிடமாட்டேன் என்பதற்கும் வித்தியாசம் இல்லை.)

3. சாதிப் பெயரை எங்கும் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லிவிட்டு "நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்த அஸ்வினி வீட்டிற்கு" என்று சொல்வதன் மூலம் சாதியை வலிந்து பயன்படுத்துவதன் உள்அர்த்தம் என்ன?  "வன்னியர், தேவர், பறையர் சமூகத்தை சார்ந்தவர் வீட்டிற்கு சென்றார்" என்று எப்போதாவது இப்படி விளம்பரப்படுத்தியது உண்டா?

நரிக்குறவர்களோடு யாரும் பழகமாட்டார்கள் என்று இருக்கும் பொது மனநிலை (கேவலமான மனநிலை) யைத்தான் இச்சொற்கள் காட்டுகின்றன. அப்படிப்பட்டவர்களின் வீட்டிற்கு சென்றார் என்பதை வலியுறுத்தும் சொல்தான்  "நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்த அஸ்வினி வீட்டிற்கு" என்பது. என வேதனையுடன் பதிவிட்டுள்ளார் தேசிய துப்புரவு ஆணைய தலைவர் வெங்கடேசன்.

வெங்கடேசன் எழுப்பிய கேள்விகள் ஒவ்வொன்றும் ஆளும் கட்சியின் அதிகாரத்தில் இருக்க கூடிய முதல்வரை நோக்கி எழுப்ப பட்ட நிலையில் தேசிய துப்புரவு ஆணைய தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிப்பாரா முதல்வர் என்ற கேள்வி எழுந்துள்ளது.