Cinema

விஜய் முதலமைச்சரா..? மறைமுகமாக பேசிய மன்சூர் அலிகான்..!

Vijay, Mansoor alikhan
Vijay, Mansoor alikhan

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவதாக இந்த மாத தொடக்கத்தில் தனது அரசியல் கட்சியின் பெயரை தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்தார். அப்போது வர கூடிய லோக்சபா தேர்தலில் போட்டியில்லை என்றும் தனது ஆதரவு எந்த கட்சிக்கும் இல்லை என்றும் அறிவித்து சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவதாக தெரிவித்தார். அவ்வப்போது தனது கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்து வந்தார். இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தனக்கான கட்சியை தொடங்கினார், அதன் ஒரு பகுதியாக செய்தியாளர் சந்திப்பில் விஜயை சீண்டி பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.


தமிழ் சினிமாவில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருப்பவர் விஜய். இவரது படங்கள் வெளியானால், கோடி கணக்கில் சம்பாதிக்கும் என்பதில் மாற்றமில்லை. சிறு வயதில் இருந்து சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்படி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்குகிறார். ஒரு பக்கம் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த விஜய் மறுபக்கம் அரசியலுக்கு வருவதாக தனது செயல்களை ஈடுபடுத்தி வந்தார். அரசியலில் களமிறங்கியிருப்பதால் விஜய்யின் ரசிகர்களுக்கு ஒருபக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், விஜயை இனி திரையில் கொண்டாடமுடியாது என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். 

இதற்கு திரை விமர்சகர்கள் உள்ளிட்ட பலரும் விஜய் முழுமையாக சினிமாவில் இருந்து விலக மாட்டார். ஒரு படத்தில் நடித்தால் அவருக்கு சம்பளமாக கோடி கணக்கில் பெறுவார் அதை யாராக இருந்தாலும் விட்டு கொடுக்க மாட்டார்கள் என கூறப்பட்டு வருகிறது. விஜய் நிச்சயம் 2026 தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் கமல் போல அரசியல் ஆசை இல்லாமல் சினிமாவிற்குள் வந்துவிடுவார் என கூறுகின்றனர். விஜய் கட்சிக்கு ஆதரவு இருந்தாலும் லெட்டர் பேட் மூலம் கட்சியை அறிவித்து விட்டு இரண்டு வருடங்களுக்கு விடுமுறை விடப்பட்டவர் நடிகர் விஜய் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. அதேபோல் சட்டமன்ற தேர்தலில் விஜய் தனித்து தான் போட்டியிடுவார் என கருத்துக்கள் வெளியாகிறது.

விஜய் கட்சி தொடங்கியபோது அடுத்ததாக நடிகர் விஷால் போட்டியிடுவதாக கூறப்பட்டது. அனால் அவர்க்கு முன்னாள் நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான், "நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. சினிமாவில் வாய் வலிக்க வலிக்க முத்தம் கொடுத்துவிட்டு; வெவ்வேறு மாநில நடிகைகளுடன் முட்டி தேய நடனமும் ஆடிவிட்டு ரிட்டையர்டு வயது வரும்போது அரசியலை நோக்கி வரும் நடிகர்கள் நேராக முதலமைச்சர்தான் என்று நினைக்கிறார்கள். அப்போ வில்லன் நடிகர்களான எங்களது நிலைமை. எங்களையும் முதலமைச்சர் ஆக்குங்க. நானும் சினிமாக்காரனே" என கூறினார்.

நடிகர் மன்சூர் அலிகானின் இந்த பேச்சு நிச்சயம் விஜயை தான் மறைமுகமாக பேசப்பட்டு வருவதாக இணையத்தில் பேச்சுக்கள் அடிப்பட இதனால் விஜய் ரசிகர்கள் மன்சூர் அலிகான் மீது கடும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது. விஜய் கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்தார் அதில் தான் முத்த காட்சிகள் இடம் பெரும் நடனம் என்றால் விஜயின் நடனம் ரசிகர்களால் கவரப்படும் ஆகவே விஜயை தான் மன்சூர் அலிகான் பேச்சுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மன்சூரை வசைபாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கும் மன்சூர் அலிகானுக்கும் என்ன பிரச்சனை என தெரியவில்லை கடைசியாக இருவரும் லியோ படத்தில் நடித்திருந்தனர்.