
தமிழ் சினிமாவில் இளமை நாயகனாக வளம் வருபவர் நடிகர் சிவகுமார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர். ஒரு கட்டத்தில் நடிகராக அறிமுகமாகி மக்களை கவர்ந்தவர். இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருடன் நடித்திருக்கிறார். முன்னதாக சிவகுமார் பொது நிகழ்ச்சியின் போது இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றபோது அவரது செல்போனை கீழே தட்டிவிட்டார் அது சர்ச்சையானது. அந்த வகையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் மாட்டியுள்ளார் நடிகர் சிவகுமார்.
தான் சினிமாவில் எப்படி வளர்ந்தனோ அதேபோல் தனது இரு மகன்களையும் சினிமாவில் முன்னனி நடிகராக வளர வைக்க சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அவர்களும் மாணவர்களுக்கு உதுவி செய்வது,விவசாயிகளுக்கு உதவி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அதேநேரம், சில நேரம் அவர் சர்ச்சையிலும் சிக்குவதுண்டு. அந்த வகையில், சினிமா பிரபலங்களை கண்டால் ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்கவேண்டும் அவர்களுக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என ஆர்வம் இருக்கும். அப்படி தான் கடந்த சில ஆண்டுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகர் சிவகுமார் பங்கேற்றார். அப்போது வாலிபர் ஒருவர் அவருடன் புகைப்படம் எடுப்பதற்காக தனது மொபைலில் செல்பி எடுத்தார். அப்போது கடுப்பான நடிகர் சிவகுமார் அந்த செல்போனை கீழே தள்ளிவிட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக சிவகுமார் மீது விமர்சனம் வந்தது. உங்களது மகன்கள் இருவரும் பெரிய நடிகர் தானே அந்த ஆர்வத்தில உங்களிடம் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என மகிழ்ச்சியில் இருந்திருப்பான் என கூறப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு நடிகர் சூர்யாவும் வருத்தம் தெரிவித்தார். அதன் பிறகு சிவகுமார் அந்த இளைஞர்க்கு புதிய செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தார். அதே போன்று பல வருடத்திற்கு பிறகு சிவகுமார் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். காரைக்குடியில் உள்ள கண்ணதாசன் மண்டபத்தில் பழ கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிவக்குமார் கலந்து கொண்டார். விழாவில் பேசும்போது பழ.கருப்பையாவின் போராட்டம் கண்கலங்க செய்வதாக கூறி அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த விழாவின் இறுதியில் சர்ச்சையில் சிக்கினார் சிவகுமார்.
மண்டபத்தில் விழா முடிந்து கீழே வந்தவருக்கு சிவகுமாரின் வயதான ரசிகர் ஒருவர் அவருக்கு பொன்னாடை போர்த்துவதற்காக சால்வையை கையில் வைத்தபடி நின்றிருந்தார். அதைப்பார்த்து கோபப்பட்ட சிவக்குமார் அதை உடனே கையிலிருந்து பிடிங்கி தூக்கி கீழே எறிந்துவிட்டு முணுமுணுத்து அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் அந்த ரசிகரின் முகம் வாடிப்போனது. யோகா, தியானம் என மனதை கட்டுக்குள் வைத்திருக்கு சிவக்குமார் இப்படி நடந்து கொள்வது ஆச்சர்யமாக இருக்கிறது. அப்போ செல்போன். இப்ப சால்வை. இன்னமும் இவர் மாறவே இல்லை. இதுபோன்ற நபர்களை சிறப்பு விருந்தினராக ஏன் அழைக்கிறார்கள்?’ என நெட்டிசன்கள் பொங்கி வருகின்றனர். சினிமாவில் நடிப்பவராகள் எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பதாக இல்லையாம். சினிமாவில் ஒரு முகத்தையும் நிஜத்தில் வேறு முகத்துடனும் இருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.