Cinema

வளர்த்து விட்டவர்களை வஞ்சித்த நயன்தாரா..? லிஸ்ட்டில் லெஜெண்ட்டும்..!

Nayanthara, legend saravana
Nayanthara, legend saravana

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா மலையாள படத்தில் நடிகையாக நடிக்க ஆசைப்பட்டவர் நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி நடிகைகளில் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை கட்டியுள்ளார் நடிகை நயன்தாரா நடிகர்கள் நடிகைகள் வளர்ச்சி அடைந்தாலே அவர்களது ஆட்டிடியூட் மாற்றம் ஏற்படுவது உண்மை என்பது போல நயன்தாரா செய்த் சேட்டையை தற்போது அம்பலமாகியுள்ளது.


மலையாளத்தில் பிறந்த நடிகை நயன்தாரா தமிழ் சரத்குமார் உடன் ஐயா படத்தில் நடித்திருந்தார். அதன் பிற்காடு பட வாய்ப்புகள் வந்து முன்னனி நடிகையாக சினிமாவில் உள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தார். தமிழ் மொழியை கடந்து ஹிந்தியில் ஜவான் படத்தில் ஷாருகான் உடன் நடித்திருந்தார் அந்த படமும் மிக பெரிய வசூலை குவித்தது. இந்த நிலையில் அவர் மீது தற்போது விமர்சனம் வந்த வண்ணம் உள்ளன. ஆரம்பத்தில் அன்னபூரணி படத்தில் எழுந்த சர்ச்சை தற்போது வரை நீடித்து வருகிறது. 

ஹீரோக்களுடன் இணைந்து நடித்ததை விட தனிநாயகியாக நயன்தாரா நடித்த திரைப்படத்தின் பட்டியல் அதிகம்.  ஒரு காலத்தில் அந்த படங்கள் ஹிட் கொடுத்தாலும் இப்போது தனித்து நடித்தால் அவர்கள் மீது விமர்சனம் வர தான் செய்கிறது. நடிகை அனுஷ்கா நடிப்பில் வந்த படம் அருந்ததி அந்த படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்ததால் நடிகைகளும் ஹீரோ அல்லாத படங்களை தேர்வு செய்து வந்தனர். ஒரு குடத்தில் ஜோதிகாவுக்கு அது கைகொடுக்காமல் போந்து அந்த வரிசையில் தற்போது நயன்தாராவும் இனைந்து விட்டார்.  சமீபத்தில் வெளியான படங்கள் ஏதும் கைகொடுக்காமல் போனதால் அவரது சூப்பர் ஸ்டார் பட்டதையே ரசிகர்கள் கலாய்க்கும் நிலைக்கு வந்துவிட்டார்.

நயன்தாரா திருமணம் செய்து கொண்டதும் பெண்களுக்கான தொழில் ஆர்வம் காட்டி வந்தார். அதாவது, பெண்களுக்கான மேக்கப் பொருள் ஆகியவை சிறு தொழிலாக செய்து வந்தார். இதனால் படம் சாறுகளை கொண்டுவருவதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர். முன்பாக, நயன்தாரா உச்சத்தில் இருக்கும் போது சில இயக்குனர்களிடம் காட்டிய ஓவர் ஆட்டிடியூட் தான் தற்போது பேசு பொருளாகி இருக்கிறது. அது என்னவென்றால், லெஜண்ட் படத்தில் முதல் முதலில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவை தான் படக்குழு அணுகி இருக்கிறது.  அப்போது அவர் வாங்கிய இரண்டு கோடி சம்பளத்தை 5 மடங்கு அதிகமாக தருவதாகவும் கூறப்பட்டதாம். ஆனால் தனக்கு 100 கோடி கொடுத்தாலும் அந்தப் படத்தில் நடிக்க விருப்பமில்லை என நயன்தாரா விலகிவிட்டார். இதில் கடுப்பான லெஜண்ட் சரவணா நயனின் ஆடம்பர அப்பார்ட்மெண்டிற்கு முன்னர் இருந்த பிளாட்டை சொந்தமாக வாங்கினாராம். 

தன்னுடைய ஆடம்பர காரை நயன்தார பார்க்கிங்கில் நிறுத்து வெறுப்பேத்தியதாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் ஐயா படத்தில் இயக்குனர் ஹரி தான் நயன்தாராவை அறிமுகப்படுத்தியுள்ளார் . அவரிடமும் நயன்தாரா தனது வேலையை காட்டியுள்ளார். அதாவது, விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி படத்தில் நடிக்க ஹரி நயன்தாராவிடம் அணுகியுள்ளார் அப்போது நயன்தாரா நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். அதன் பிறகு தான் பானுவை தேர்வு செய்து படத்தை தொடங்கினாராம். வளர்த்து வீட்டவர் மீது நயன்தாரா கொடுக்கும் பாசம் இதுதானா என நெட்டிசன்கள் அவரை வசைப்பாடி வருகின்றனர். நடிகைகள் வளர்ந்து விட்டால் இது போல நடவடிக்கைகள் அதிகமாக தான் இருக்கும் என் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.