
திமுக நிர்வாகியே 3000 கோடி போதை பொருள் கடத்தலி்ல் ஈடுபட்டுள்ளார். திமுக போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கடத்தல்காரர்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து போதைப்பொருளுக்கு எதிராக உள்ளது திமுக கட்சி என பெருமிதம் கொண்ட நிலையில் தற்போது அது தலைகீழாக மாறியுள்ளது. குறிப்பாக திரை பிரபலம் இதற்கு தொடர்பு உள்ளதா என இணையத்தில் புகைப்படம் வைரலாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக திமுக முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் குறித்து பல்வேறு அதிர்ச்சிகர தகவல் வெளியில் வந்துள்ளது. இந்தியாவை தாண்டி அஸ்திரிலேயே, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளிலும் இந்த விவகாரம் பூதாகரமாக உள்ளது. ஜாபர் என்பவர் திமுகவின் மேற்கு சென்னை மாவட்டத்தின் அயலக அணியின் துணை செயலாளரும், சினிமாவில் தயாரிப்பாளருமாக இருந்துள்ளார். இவர் தற்போது அமீர் இயக்கி நடிக்கும் இறைவன் மிகப்பெரியவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தயாரிப்பாளராக ஜாபர் இருந்து வருகிறார். ஜாபர் பிரச்சனையில் இயக்குனர் அமீரை மையப்படுத்தி பேசப்பட்டு வருகிறது. பருத்திவீரன் பட பிரச்சனையில் அமீருக்கு ஆதரவாக பலர் வந்த நிலையில், சூர்யா மற்றும் கார்த்திக் இருவரையும் இணையத்தில் போட்டு துவைத்து வந்தனர்.
இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் பணத்தில் தான் இறைவன் மிகப்பெரியவன் படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கான பணிகள் கடந்த வாரம் திடீரென்று நிறுத்தப்பட்டது. அதற்கு காரணம் ஜாபர் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்துள்ளனர். அந்த வகையில் அமீர் விளக்கம் கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் என்பதை தாண்டி அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜாபர் உண்மையிலேயே குற்றம் செய்திருந்தால், சட்டத்தின் கரங்கள் அதற்கான வேலைகளை பார்க்கட்டும். இதுபோன்ற மோசமான செயலில் ஈடுபடுபவர்களுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற மாட்டேன் என தன் மீது எந்த தவறும் இல்லை என்றும் அவரது கூட்டாளி எல்லாம் நான் கிடையாது என அமீர் தன் மீது கிளம்பிய விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இப்படி விளக்கம் கொடுத்தாலும், என்ஐஏ விசாரிச்சு தான் ஆகும் அவர்கள் சொல்லட்டும் என நெட்டிசன்கள் கருத்தை தெரிவிக்கின்றனர். வரும் நாட்களில் இந்த விவகாரம் பூதகரமாகும் இதில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். வெளிநாடுகளில் இருந்து எப்போது வேண்டுமானாலும் இந்தியாவில் விசாரணை நடத்தலாம் எனவும் கூறுகின்றனர். அமீர் போன்று இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் சினிமா வட்டாரங்கள் ஜாபர் உடன் நெருக்கமாக இருந்தது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திமுகவில் இருந்த ஜாபர் போதை பொருள் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து இருப்பதாக தெரியவந்துள்ளது. பல முறை அமைச்சர் உதயநிதி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் இடம் வெல்ல நிவாரணம் உள்ளிட்ட தொகையை கொடுத்துள்ளார் ஜாபர். இதனால் உளவுத்துறை அதிகாரிகள் தமிழகத்தில் என்ன செய்து வருகிறார்கள் அவர்களது வேலை என்ன என கேட்டு வருகின்றனர். மேலும், திமுக நிர்வாகிக்கு இவ்ளோ தொகை எப்படி வருகிறது இதையெல்லாம் கட்சியின் கண்டுகொள்ளமாட்டார்களா என விமர்சனம் எழுந்துள்ளது. இது தொடர்பாக யாரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி கைது செய்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.