
சினிமா வட்டாரம் என்றாலே எப்பொழுதுமே கிசுகிசுக்கள் நிறைந்த ஒரு மாயை உலகம்... இந்த உலகத்தில் ஒரு பிரபல நடிகருக்கும் நடிகைக்கும் பாராட்டுகள் வருகிறதோ இல்லையோ கிசுகிசுக்கள் கண்டிப்பாக வந்து விடும். அதிலும் குறிப்பாக ஒரு நடிகை குறித்த கிசுகிசு செய்தி மட்டும் காட்டுதீயாக வேகமாக பரவும் தன்மையை கொண்டிருக்கும்! அதில் எந்த ஒரு நடிகையின் கிசுகிசு செய்தியும் விதிவிலக்கல்ல! அந்த வகையில் சமீப காலமாக தற்போது வளர்ந்து வரும் முக்கிய ஹீரோயின் ஆக உள்ள கீர்த்தி சுரேஷ் பற்றிய கிசுகிசுக்கள் ஏராளமாக வெளிவந்த வண்ணம் உள்ளது. தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் நடிகை மேனகாவின் இளைய மகளாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பாகவே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர். இவர் ஒரு வாரிசு நடிகையாக இருந்தாலும் தமிழில் இவர் முதலில் நடித்த படம் இது என்ன மாயம் இருப்பினும் இந்த படம் கீர்த்திக்கு எந்த வித வரவேற்பையும் பிரபலத்தையும் கொடுக்கவில்லை.
கீர்த்தியின் முதல் படமான இது என்ன மாயம் வெளியாவதற்கு முன்பாகவே தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்று ரஜினி முருகன் மற்றும் தொடரி என்று இரண்டு படங்களில் நடித்தார். இருப்பினும் இந்த இரண்டு படங்களில் சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் கீர்த்திக்கு ஒரு நல்ல வரவேற்பையும் தமிழும் மக்கள் மத்தியில் பாராட்டையும் பெற்று கொடுத்தது. அதற்குப் பிறகு ரெமோ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தமிழில் இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து விஜயுடன் பைரவா மற்றும் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் என்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ்க்கு இந்த இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் மகாநதி படத்திற்கு பிறகு மூன்று கோடி சம்பளம் பெறும் நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வளர்ச்சி அடைந்தார் கீர்த்தி! மேலும் பைரவா படத்திற்கு பிறகு மீண்டும் விஜயுடன் சர்க்கார் படத்தில் இணைந்தார். இப்படி தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று திரை உலகிலும் நடித்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ்க்கு எப்பொழுது திருமணம் செய்து கொள்வார் என்று கேள்வி சமூக வலைதளத்தில் முன்வைக்கப்பட்டு கொண்டே வருகிறது.
அதே சமயத்தில் கீர்த்தி முன்னணி நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும் ஒரு செய்தி வெளியானது மேலும் நடிகர் விஜய் உடன் இணைத்தும் கீர்த்தி சுரேஷ்சை வைத்து பலவாறு கிசு கிசுக்கள் எழுந்து சினிமா வட்டாரத்தையே பரபரப்பில் ஆழ்த்தியது. அந்த வகையில் நடிகர் விஜய் மற்றும் கீர்த்தியின் காதல் குறித்து கிசுகிசுவிற்கு கீர்த்தி சுரேஷின் அம்மாவான மேனகா பள்ளி பருவத்தில் இருந்தே எனது மகள் ஒருவரை காதலித்து வருகிறார் அவரைத்தான் எனது மகள் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் அவரை நடிகர் விஜய் இடமும் எனது மகள் அறிமுகப்படுத்தி இருக்கிறாள் என்று விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதற்குப் பிறகும் கீர்த்தியின் திருமணம் நடந்து விட்டதாக பல வதந்திகள் எழுந்த வண்ணமே இருந்தது. இந்த நிலையில், பேபி ஜான் திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகம் ஆக உள்ள கீர்த்தி சுரேஷ் கடந்த 13 வருடங்களாக கேரளாவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவரின் மகனை காதலித்து வருவதாகவும் தற்போது கீர்த்திக்கும் 30 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் இருவரது திருமண பேச்சு முடிவாகி விட்டதாகவும் விரைவில் இவர்களது திருமணம் குறித்த செய்திகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவல் உண்மையா அல்லது வழக்கம் போல கீர்த்தி சுரேஷ் பற்றிய மற்றொரு வதந்தியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.