Tamilnadu

அங்க நடந்த சம்பவமே வேறு? ஜோதிமணியை செந்தில் பாலாஜி என்ன கூறினார்? வெளியான அடுத்த பரபரப்பு?

jothimani
jothimani

கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை, திமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் இணையத்தில் வைரலான நிலையில் அக்கட்சியினர் இடையே பரபரப்பை உண்டாக்கியது.


கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக அமைச்சரும் மாவட்ட செயலாளருமான செந்தில்பாலாஜி தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் வேட்பாளரை இறுதி செய்வதற்கு வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில், கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கலந்து கொண்டார்.

அப்போது காங்கிரஸ் தரப்பில் 15 இடங்கள் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள் மேலும் துணை சேர்மன் உள்ளிட்ட இடங்களும் கேட்டு இருக்கிறார்கள் ஆனால் திமுக தரப்பில் உங்களுக்கு 5 இடங்கள் கொடுக்க முடியும் மேலும் நீங்கள் கேட்க கூடிய இடங்களில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை நாங்கள் சொல்ல கூடிய இடங்களில் உங்கள் கட்சியில் சில வேட்பாளர்களை தேர்வு செய்யுங்கள் என திமுக தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

இது எதிலும் எம்.பி. ஜோதிமணியிடம் கலந்து கொள்ளாமல் அவர்களாகவே தொகுதி பங்கீடு குறித்து பேசிக் கொண்டு இருந்துள்ளனர் மேலும் ஜோதிமணி ஆதரவாளர்கள் யாருக்கும் சீட் கிடைக்காத சூழல் உண்டானது இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி திமுகவினரிடம் கரூரில் யார் தயவில் யார் வெற்றி பெற்றுள்ளார்கள் என அனைவருக்கும் தெரியும் நாங்கள் அடிக்கடி கட்சி மாறுபவர்கள் அல்ல உங்களை போல் தொகுதியை மாற்ற கூடியவர்களும் அல்ல என ஆவேசமாக பேசியிருக்கிறார்.

அப்போது, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க நீ யார் வெளியே போ மாவட்ட தலைவர்களுடன் பேச தான் எங்க கட்சி தலைமை சொல்லியிருக்கு நீ எந்த மாவட்ட பொறுப்பில் இருக்கிறாய் என கொந்தளித்து இருக்கிறார்கள் திமுகவினர் மேலும் என்று அங்குள்ள திமுகவினர் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து திமுகவினரை ஆவேசமாக திட்டிவிட்டு வெளியேறிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, பேச்சவார்த்தையின் போது, திமுகவினர் வெளியேற சொன்னதாக குற்றம்சாட்டினார்.பேச்சுவார்த்தைக்கு வந்த கூட்டணி கட்சியினரை வெளியே போகச் சொன்னது கூட்டணி தர்மமா என்றும் அவர் ஆவேசத்துடன் கூறிவிட்டு வெளியேறினார்.

பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை வெளியே போகச் சொன்னதாக, திமுக அலுவலகம் முன்பு ஆவேசத்துடன் ஜோதிமணி பேசிய வீடியோ வைரலான நிலையில் இது குறித்து திமுக தரப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விளக்கம் கேட்டு இருக்கிறார்கள்.

அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் கொடுத்துள்ளார், ஆரம்பத்தில் இருந்தே மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஒ என நான் சொல்லும் ஆட்களை தேர்வு செய்யவேண்டும் என அழுத்தம் கொடுத்தார் ஜோதிமணி, இதில் நாங்களே தலையிடுவது இல்லை நீங்கள் கேட்கிறீர்களே என சொன்னேன் அன்றில் இருந்து பழைய பகையை மனதில் வைத்து கொண்டு வேண்டுமென்றே ஜோதிமணி செயல்படுகிறார் என விளக்கம் கொடுத்துள்ளார் செந்தில்பாலாஜி.

இதையடுத்து காங்கிரஸ் கரூர் மாவட்ட நிர்வாகிகள் பலரே ஜோதிமணிக்கு எதிராக கட்சி தலைமையிடம் புகார் கொடுத்துள்ளனர், திமுக கூட்டணியில் இல்லை என்றால் நம்மால் மாநிலம் முழுவதும் எத்தனை வெற்றிகளை பெற முடியும், அவர்களே செலவையும் பார்த்து கொள்வதாக கூறியுள்ளனர் ஆனால் அனைத்தையும் ஜோதிமணி சொந்த பகையின் காரணமாக உடைக்க பார்க்கிறார் என தகவல் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில் ராகுல் காந்தியே நான் சொன்னால் கேட்பார் என வலம் வந்த ஜோதிமணிக்கு சொந்த மாவட்ட தலைவர்களே ஜோதிமணிக்கு ஆதரவாக இல்லாமல் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.