Tamilnadu

நேற்று சமந்தா இன்று ராஷ்மிகா இணையத்தில் கடும் வைரலாகும் ட்ரோல் பாடல்!

dmk song
dmk song

சமீபத்தில் வெளியான புஸ்பா திரைப்படத்தில் மெகா ஹிட் அடித்த பாடல் ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா பாடல், சமந்தா நடனத்தில் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது,  இந்த பாடலை அப்படியே உல்டாவாக மாற்றி சிலர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.


இந்த பாடல் இணையத்தில் கடும் வைரலான நிலையில் தற்போது அதே படத்தில் மற்றொரு ஹிட் பாடலான சாமி பாடலை திமுக தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை காரணம் காட்டி வரிகளை அமைத்துள்ளனர்.

இந்த பாடல் வரிகள் திமுகவை கடுமையாக டேமேஜ் செய்துள்ளது, நகையை அடகு வைக்க சொன்ன சாமி என்ன ஆச்சு சாமி ... என தொடங்கிய பாடல் திமுகவின் வாக்குறுதிகளை விமர்சனம் செய்யும் விதமாக அமைந்துள்ளது, உன் கட்ட குரலை கேட்கையிலே என ட்ரோல் செய்துள்ளனர் ஒரு குழுவினர்.

இந்த பாடலும் இப்போது சமூக வலைத்தளமான முகநூலில் வைரலாகி வருகிறது, ஊ சொல்றியா டப்பிங் பாடலை தொடர்ந்து தற்போது சாமி டப்பிங் பாடலையும் பாஜகவினர் இதனை பல்வேறு முகநூல் பக்கங்களில் பரப்பி வருகின்றனர், இந்த பாடலுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர், உடனடியாக பாடலை நீக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதே நேரத்தில் இந்த பாடலுக்கு தற்போது டப்பிங் செய்து இளசுகள் டப் மாஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது, இணையத்தில் வைரலாகும் பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.