லாவண்யா விவகாரம் போன்று பல ஆண்டுகளுக்கு முன்னரே இதே போன்ற ஒரு சம்பவம் நடைபெற்று இருப்பதாகவும் அப்போது என்ன நடந்தது என்பது குறித்தும் தேசிய துப்புரவு ஆணைய தலைவர் மா வெங்கடேசன் தகவல் ஒன்றை குறிப்பிட்டுள்ளார் அது பின்வருமாறு :-
மதமாற்றம் : சுவாமி சகஜானந்தரும் லாவண்யாவும் இணையும் புள்ளி 1895 ஆம் ஆண்டு தனது ஊரில் இருந்த அமெரிக்க ஆர்க்காடு சமயப் பரப்பாளர் பள்ளியில் ஆரம்ப கல்வியைய தொடங்கினார் சுவாமி சகஜானந்தர். கிருத்துவ மிஷனாகக் காணப்பட்டாலும் அதற்குள்ளும் தீண்டாமை வெளிப்பட்டது.
மாணவர்களை வேற்றுமைப்படுத்திப் பார்க்கும் உணர்வை அறிய முடிந்தது.. இருந்தாலும் கல்வி கற்பதில் கூர்மையான மாணவராக விளங்கினார். அடுத்து உயர்நிலைக் கல்விப் பயில திண்டிவனத்தில் இருந்த அமெரிக்கன் ஆர்க்காடு கிருத்துவப் பள்ளியில் 1901இல் சேர்ந்தார்.
அறிவுத்தேடல் அவருக்குள் புயலாய்ப் பரவிக் கிடந்தது. வகுப்பில் எந்த மாணவரும் அவரோடு போட்டிப் போட்டு படிக்க முடியவில்லை. ஆசிரியர்களோ அதிர்ச்சிக்குள்ளாயினர். காரணம் அப்படியொரு அறிவின் செயல்பாடு சுவாமிக்குள் அடையாளப்பட்டது. இந்நிலையில்தான் சகஜானந்தரின் உண்மை பெயரான 'முனுசாமி' என்னும் பெயரை 'சிகாமணி' என மாற்றி அழைத்தனர் ஆசிரியர் பெருமக்கள்.
சிகாமணி பையினை மனதிற்குள் உள்வாங்கிக் கொள்வதிலும். ஒப்பிப்பதிலும் கிருத்துவ மாணவர்களையும் மீறிய ஆற்றல் பெற்றிருந்தார். இதனைப் பாராட்டிய பாதிரியார்கள் கிறித்துவ மதத்தைப் பின்பற்றுவதற்கும் அதனைத் தழுவ செய்வதற்குமான முயற்சிகளை மேற்கொண்டனர். சகஜானந்தர் ஏற்க மறுத்ததால் கிருத்துவ பள்ளியில் படிப்பைத் தொடர முடியாத நிலை உருவானது.
இதன் காரணமாக சகஜானந்தர் படிப்பை இடையிலே நிறுத்திய சம்பவம்தான் எளிய - ஓடுக்கப்பட்ட மக்களின் கல்வி எழுச்சிக்கான வரலாறாக மாறியது.
கிறித்துவ மதத்தில் சேர மறுத்ததால், அவருக்காக, 1903–ஆம் வருடத்தில் செலவு செய்த தொகையைத் திரும்பக் கேட்டனர். விடுதியில் தங்கிப் படித்ததால் அறை மற்றும் உணவுத் தொகையென 60 ரூபாயை அவரின் தந்தையிடம் இருந்து வசூலித்தனர்.
மதம் மாற மறுத்ததால் கல்வி மறுக்கப்பட்டு கட்டணம் கட்டாய வசூலாக மாறியதை உணரும் பட்சத்தில் அவர்களின் மதவெறியை வெளியுணர முடிகிறது.(நூல் - சுவாமி சகஜாநந்தா: எழுத்தும் பேச்சும், பக். 22)
சுவாமி சகஜானந்தர் மதமாற்றத்தை ஏற்காமல் பள்ளியை விட்டு வெளியேறினார். ஆனால் லாவண்யாவோ உலகத்தை விட்டே வெளியேறினார் என குறிப்பிட்டுள்ளார் மா வெங்கடேசன்.
More watch videos