கடினமாக உழைத்து பணத்தினை சேர்த்து வசதியாக வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக இருந்து வருகிறது. அவ்வாறு வசதியான பிறகு நம்மிடம் உறவினர்களும் நண்பர்களும் அவர்களின் தேவைக்காக வந்து பழகுவதும் நம்முடன் இருப்பதும் நம்மால் பார்க்க முடியும். ஆனால் நமக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டு அதனால் நாம் அவதிப்படும்போது பணத்திற்காக நம்மிடம் பழகும் நண்பர்களோ உறவினர்களோ நம்முடன் இருக்க மாட்டார்கள். பணம் அதிகம் நம்மிடம் இருக்கும் பொழுது இருந்தவர்கள் நோய் நம்மளை தாக்கப்பட்ட பொழுது ஒரு உதவி கூட செய்யாமல் நம்மை விட்டு சென்று விடுகிறார்கள்.
மேலும் நமக்கு வந்த நோய் அவர்களுக்கும் தாக்கிவிடும் என்றும் ஒரு சிலர் நம்மிடம் வருவதற்கு மிகவும் பயம் கொள்கின்றனர். ஆனால் எந்த நிலைமை வந்தாலும் நம்முடன் இருக்கப் போவது நம் பெற்றோர்களும், உடன் பிறந்தவர்கள் மட்டும்தான். மேலும் ஏதேனும் நோய் ஏற்பட்டாலும் கூட யாரும் இல்லாத நிலைமையில் இருக்கும் பொழுதும் நம் பெற்றோர்களும் உடன் பிறந்தவர்களும் எப்போதும் உதவியாக கூடவே இருப்பார்கள். இதுபோலவே தற்போது ஒரு பிரபல நடிகை ஒருவரின் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரே கூறியிருப்பது மிகவும் அதிர்ச்சியான ஒன்றாக இருந்து வருகிறது.
நேபாளி நடிகையாக இருந்தாலும் கூட இந்திய திரைப்படங்களில் குறிப்பாக இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களில் நடித்து அந்த ஒரு பிரபல நடிகை தான் மனிஷா கொய்ராலா!!! இவர் 90களில் ஃபேவரட் ஹீரோயினியாகவும், பலருக்கு கனவு கன்னியாகவும் இருந்து வந்துள்ளார்!! மேலும் தனது சிறந்த நடிப்பிற்காக மூன்று பிலிம்பேர் விருதுகள் போன்ற பல விருதுகளை பெற்று அதிக அளவில் ரசிகர்களை கொண்டிருந்த நடிகையாக 90'ஸ் களில் இவர் இருந்து வந்தார். முதலில் பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்து வந்த மனிஷா கொய்ராலா தமிழில் மணிரத்தினம் இயக்கிய பம்பாய் என்னும் திரைப்படத்தில் முதல் முதலாக ஹீரோயினியாக அறிமுகமானார்.
அதன் பிறகு இந்தியன், முதல்வன் மற்றும் ஆளவந்தான் போன்ற திரைப்படங்களில் பிரபல நடிகர்களுடன் இணைந்து ஜோடியாக நடித்திருந்தார். கடைசியாக தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்னும் திரைப்படத்தில் மாமியார் கேரக்டரில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு இவருக்கு கருப்பை குற்ற நோய் ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்த பிறகு நடிப்பிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்தார். தற்போது அதற்கான சிகிச்சைகள் மேற்கொண்டு அதிலிருந்து மீண்டு வந்த இவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட தி டைமண்ட் பஜார் என்னும் வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த போது சந்தித்த ஒரு சில விஷயங்களை நம்முடன் பகிர்ந்து உள்ளார்!! அது என்னவென்றால்!!
உடல் ஆரோக்கியத்தின் மீது அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவருக்கு நிறைய உறவினர்களும் நண்பர்களும் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் அனைவருமே வசதியானவர்கள் என்றும் கூறியுள்ளார். ஆனால் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த பொழுது அவருடன் யாருமே இல்லை என்றும் அனைத்து உறவினர்களும் நண்பர்களும் விலகி சென்று விட்டார்கள் என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார். என்னதான் உறவினர்களும் நண்பர்களும் உடன் இல்லாத நிலைமையில் கூட என்னுடன் என் பெற்றோர் மற்றும் சகோதரர் சகோதரிகள் தான் உடன் இருந்தார்கள் என்று மிகவும் நெகிழ்ச்சியாகவும் கூறியுள்ளார். மேலும் நோய் ஏற்படுவதற்கு முன்பு இருந்த உடல் நிலைக்கும் தற்போது உள்ள உடல் நிலைக்கும் நிறைய மாற்றங்கள் உள்ளது என்றும் அதனால் எந்த வேலைகளையும் செய்ய முடியவில்லை என்றும், மன உளைச்சலில் இருப்பதாகவும் மனிஷா கொய்ராலா கூறியுள்ளார்!!