சிம்புவிற்கு மாநாடு திரைப்படம் பெரிய வெற்றியை கொடுக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த சூழலில் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றும் சாதிக்க முடியாத நிலையில் இருக்கிறது, இதற்கு காரணம் பல சொல்லப்பட்டாலும் படத்தில் அரசியல் வாதி குடும்பத்தை முன்னிறுத்தி நடந்த மோதலும் ஒருவகையில் காரணம் என்று கூறப்படுகிறது.
சிம்புவின் மாநாடு படத்தில் மாநிலத்தின் முதல்வரை யாரோ கொல்வதை டைம் லூப்பில் சிக்கியுள்ள ஒருவர் காப்பாற்ற முயற்சிக்கிறார். இது வெங்கட் பிரபுவின் அரசியல் என படத்தின் டைட்டிலிலேயே போட்டு அரசியல் படம் என சொல்லி இருக்கிறார் இயக்குனர் . படம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் ஆரம்பமாகும் பரபரப்பு, கடைசி வரை நிற்காமல் சீரான வேகத்தில், சில இடங்களில் கூடுதலான வேகத்தில் நகர்கிறது. எந்தக் காட்சியிலும் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு படத்தின் காட்சிகளுக்குள் நம்மை சிக்க வைக்கும் வித்தையைச் சரியாகச் செய்திருக்கிறார் வெங்கட் பிரபு.
மங்காத்தா படத்திற்குப் பிறகு மீண்டும் இறங்கி அடித்திருக்கிறார். கோயம்புத்தூரில் நண்பனுக்கு கல்யாணம் செய்து வைப்பதற்காக துபாயில் இருந்து வருகிறார் சிம்பு. விமானத்தில் வரும் போது டைம் லூப்பில் சிக்கிக் கொள்கிறார். ஒரு மாநாட்டில் மாநிலத்தின் முதல்வரை யாரோ சுட்டுக் கொல்கிறார்கள். எதற்காகச் சுடுகிறார்கள், யார் சுடுகிறார்கள், தனக்கு ஏன் நடந்ததே திரும்பத் திரும்ப நடக்கிறது என்பதை சிம்பு எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.
இடைவேளையில் திரைக்கதையில் வைத்திருக்கும் டிவிஸ்ட் எதிர்பாராத ஒன்று. அதற்குப் பிறகு சிம்புவுக்கும், சூர்யாவுக்கும் நடக்கும் ஏட்டிக்குப் போட்டியான விஷயங்கள் பாம்பும், கீரியுமாக, அடுத்து என்ன நடக்கும், யார் முந்தப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கின்றன இப்படி நல்ல திரைப்படமாக உருவான படத்தில் ஒரு காட்சி ஆளும் கட்சிக்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது.
சினிமாவில் வரும் காட்சி ஒன்றில் உனக்கு பிறகு உன் மகன் அவனுக்கு பிறகு அவன் மகன் என உன் குடும்பம் மட்டும்தான் ஆளனுமா நாங்கள் ஆளக்கூடாதா? என கேட்க முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்த விஜய்யின் தந்தை சந்திரசேகர் எனக்கு அந்த எண்ணம் இல்லை என்று கூறுகிறார், உடனே அவர் அப்போ ஏன் உன் மகன் போட்டோ அனைத்து பிளேக்ஸ் பேனர் என எல்லா இடங்களிலும் பெரிதாகி கொண்டே செல்கிறது.
என பேசும் வசனம் அப்படியே தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதியை குறிப்பிடும் படியாக இருக்கிறது என ஒரு கருத்து திரைப்படத்தை வெளியாகும் முன்பே பார்த்த சிலர் கூற அவ்வளவுதான் பெரும் அக்கப்போரே உண்டாகிவிட்டது என கூறுகிறார்கள், இதையடுத்து சாட்டிலைட் ரைஸ்ட்ஸை வாங்கிவிட்டுத்தான் படத்தையே ரிலீஸ் செய்ய அனுமதித்ததாம். படத்தில் குறிப்பிட்ட சீனை மட்டும் வெட்டி நெட்டிசன் ஒருவர் பகிர்ந்து இருக்கிறார் அதனை கீழே இணைத்துள்ளோம் வீடியோ காட்சி லிங்க் .
More news from tnnews24