கடந்த அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் 2020-ம் நிதியாண்டுக்கான மானிய கோரிக்கை விவாதத்தின்போது, அப்போதைய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், ‘‘தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவ.1-ம் தேதி ’தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும்’’ என்று அறிவித்தார்.
அதன்படி, 2020-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு தினம் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்பட்டது இதற்காக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கிஅரசாணை வெளியிடப்பட்டது.இதற்கு இடையில் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசாங்கம் தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தின் நாளை மாற்றியுள்ளது தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18 -ம் தேதியே இனி தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் இருக்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்களே முழுமையான ஆதரவை வழங்கவில்லை.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை செய்து அதன் பிறகு தமிழ்நாடு நாள் கொண்டாட அரசாணை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக தமிழ்நாடு நாள் நவம்பர் 1 என செயல்படுத்தியதால் அதனை மாற்ற முதல்வர் ஸ்டாலின் குற்றம் சுமத்துவதாக கூறினார்.
இப்படி பல்வேறு தரப்பினரும் தமிழ்நாடு நாள் பெயர் மாற்றம் குறித்து கருத்துக்களை தெரிவித்துவரும் சூழலில் தமிழக திரை பிரபலம் நடிகை கஸ்தூரி தனது கருத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார், இதுகுறித்து அவர் "குறிப்பிட்ட" கருத்து பின்வருமாறு :- பிறப்பை வைத்து பிரிவினை அரசியல் செய்யும் அரசியல் வியாபாரிகள் தமிழனை குழப்பியது போதாதா? தமிழ்நாட்டின் பிறப்பில் ஆராய்ச்சி தேவையா?
பிறப்பிலும் பெயர் வைப்பதிலும் என்ன இருக்கிறது. பிறப்பதா பெருமை? பார் புகழ சிறப்பதே பெருமை. தாய் தமிழகத்தை நாட்டுக்கே முன் மாதிரி மாநிலமாக அமைத்து சென்ற வள்ளல்கள் தனியாக நாளும் கேட்கவில்லை, தனித்தமிழ்நாடும் கேட்கவில்லை. அவர்களுக்கு ஒவ்வொரு தினமும் தமிழ்நாட்டு தினம் தான். இதில் எல்லாம் அரசியல் ஆதாயம் தேட தெரியாத உண்மை தலைவர்கள் அவர்கள் !
சொந்த மக்களை சூறையாடி குடிகாரர்களாக்கி ஆட்டுமந்தை அரசியல் செய்வதை விட்டு ஆக்க பூர்வ அரசியலை கையிலெடுங்கள். மக்கள் மகிழ்ந்தால் தாய் பூரிக்கப்போகிறாள். தம் மக்களை கொண்டாடுவதே தாய் தமிழ்நாட்டுக்கு பெருமை எனஎன தனக்கே உரிய பாணியில் கிழி கிழி என கிழித்து தொங்கவிட்டுள்ளார் .