மக்கள் அதிகம் செல்போனில் பயன்படுத்தும் அன்றாட செயலியில் பேஸ்புக்கிற்கு சொந்தமானா வாட்ஸ்ஆப் முதலிடத்தில் உள்ளது. நம்ம வாட்ச் அதிகமா பாக்குறமோ இல்லையோ ஆனா வாட்ஸ்ஆப் மணிக்கொருமுறையாவது பார்த்திடுவோம்.
அப்படிப்பட்ட பிரபலமான வாட்ஸ்ஆப் நிறுவனம் ஒரு புது தகவலை சமூகவலை தளங்களில் வெளியிட்டுள்ளது.. அது புது தகவல் மட்டும் இல்லை நிறைய பேரை புரட்டி போடும் தகவலும் கூட.
"ஆம் இனி வாட்ஸ்ஆப் ஒரு சில ஆண்ட்ராய்டு போன்களிலும் ஐ ஓ எஸ் போன்களிலும் இயங்காது என்ற திடிக்கிடும் தகவல் தான் அது".நவம்பர் 1இல் இருந்து இந்த போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் வாட்ஸ்ஆப் உபயோகிக்க முடியாது.
நீங்கள் எந்த மாடல் மொபைல் வைத்துள்ளீர்கள் என்பதை தெரிந்து கொள்ள உங்கள் போனில் செட்டிங்ஸ் சென்று அதில் சாப்ட்வேர் அப்டேட் என்ற பதிவை பார்த்து தெரிந்து கொள்ளலாம்... இனி எந்த எந்த சாப்ட்வேரில் வாட்ஸ்ஆப் ஓபன் செய்ய முடியாது என்பதை கீழே உள்ள லிஸ்ட்ல பார்த்து தெரிந்து கொள்ளலாம்...
சாம்சங்:சாம்சங் கேலக்ஸி ட்ரெண்ட் லைட் (Samsung Galaxy Trend Lite),கேலக்ஸி SII (Galaxy SII),கேலக்ஸி ட்ரெண்ட் II (Galaxy Trend II)கேலக்ஸி எஸ் 3 மினி (Galaxy S3 mini)கேலக்ஸி கோர் (Galaxy Core)கேலக்ஸி எக்ஸ் கவர் 2 (Galaxy Xcover 2)கேலக்ஸி ஏஸ் 2 (Galaxy Ace 2)
ஆப்பிள்:ஐபோன் 6 எஸ் (iPhone 6S)ஐபோன் 6 எஸ் பிளஸ் (iPhone 6S Plus)ஆப்பிள் ஐபோன் எஸ்இ SE (Apple iPhone SE)
எல்ஜி இல் அதிக போன்களில் இனி இயங்காது :ஆப்டிமஸ் L3 II (Optimus L3 II)ஆப்டிமஸ் L7 (Optimus L7)ஆப்டிமஸ் L7 II Dual (Optimus L7 II Dual)ஆப்டிமஸ் L7 II (Optimus L7 II)ஆப்டிமஸ் F6 (Optimus F6)எனக்ட் (Enact)ஆப்டிமஸ் F3 (Optimus F3)ஆப்டிமஸ் L4 II (Optimus L4 II)ஆப்டிமஸ் L2 II (Optimus L2 I)ஆப்டிமஸ் நைட்ரோ எச்டி மற்றும் 4 எக்ஸ் எச்டி (Optimus Nitro HD and 4X HD)
ZTE போன்களில் பார்க்கலாம்..
ZTE கிராண்ட் எஸ் ஃப்ளெக்ஸ் (ZTE Grand S Flex)கிராண்ட் எக்ஸ் குவாட் வி 987 (Grand X Quad V987)ZTE V956 (ZTE V956)கிராண்ட் மெமோ (Grand Memo)
ஹுவாய் போன்களின் பட்டியல் :
ஹுவாய் அஸெண்ட் ஜி740 (Huawei Ascend G740)அஸெண்ட் டி குவாட் எக்ஸ்எல் (Ascend D Quad XL)அஸெண்ட் மேட் (Ascend Mate)அஸெண்ட் P1 S (Ascend P1 S)அஸெண்ட் D2 (Ascend D2)அஸெண்ட் டி 1 குவாட் எக்ஸ்எல் (Ascend D1 Quad XL).அதாவது சுருக்கமாக கூறினால் ஆண்ட்ராய்டு போன் 4.1 மற்றும் அதற்கு மேல் பதிப்பு உள்ள வாடிக்கையாளர்கள், ஐபோன் ஐ ஓ எஸ் 10 மற்றும் அதற்கு மேல் பதிப்பு வைத்திருக்கும் பயனாளர்கள் மட்டுமே வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியும்.
"மேலே குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் போன் வைத்திருக்கும் அனைவரும் வாட்ஸ்ஆப் சேவையை தொடர்ந்து பயன்படுத்தி தங்கள் நண்பர்களுடன் இணைப்பில் இருக்க வேண்டும் என்றால், தங்கள் மொபைலை மாற்றுவதை தவிர வேறு வழி இல்லை...