ஜெய்பீம் திரைப்படம் குறித்து மிக பெரிய சர்ச்சை தமிழகம் முழுவதும் பரவலாக பேசுபொருளாக மாறியுள்ளது, குறிப்பாக ஜெய்பீம் திரைப்படத்தில் திட்டமிட்டு காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதை சுட்டி காட்டி வன்னியர் அமைப்புகள் நடிகர் சூர்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க சர்ச்சைக்குரிய காலண்டர் காட்சிகளை நீக்கியது படக்குழு.
இந்நிலையில் ஏன் உண்மை கதை என்று கூறிவிட்டு பின்பு வன்னியர்களை வில்லனாக காட்ட வேண்டும் என்பது உட்பட 9 கேள்விகளை ஜெய்பீம் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் என்ற முறையில் சூர்யாவிற்கு எழுப்பி இருந்தார் அன்புமணி இதுவரை ஜெய்பீம் விவகாரம் சமூக வலைத்தளங்களில் வெறும் கருத்து மோதலாக மட்டும்தான் இருந்தது.,
ஆனால் அன்புமணிக்கு பதில் அளிப்பதாக கூறி குட்டையை குழப்பிய சூர்யாவின் செயலால் இன்று சூர்யா போலீஸ் பாதுகாப்பு இன்றி வெளியே வர முடியாத சூழல் உண்டாகியுள்ளது, திரைப்படத்தில் தங்கள் புரிதலுக்கு நன்றி என தனது தரப்பு சரி என அன்புமணிக்கு பதில் கடிதம் கொடுத்தார், இதையடுத்து பாமகவினர் வன்னியர் அமைப்பினர் போராட்டத்தில் இறங்கினர்.
பல்வேறு வட மாவட்டங்களில் சூர்யா ரசிகர் மன்ற பேனர்கள் எரிக்கப்பட்டது, சூர்யா உருவ பொம்மை கொளுத்தப்பட்டது, இந்நிலையில் சூர்யாவிற்கு ஆதரவாக சில இயக்குனர்கள், அரசியல் தலைவர்கள் அறிக்கை கொடுக்க , அது தற்போது சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சூர்யாவின் திரைப்படங்கள் திரையில் ஓடாது என்று கூறும் அளவிற்கு வந்து நிற்கிறது.
நிலவரம் இப்படி இருக்க தருமபுரி எம்.பி செந்தில் இதுவரை ஜெய் பீம் திரைப்படம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, வழக்கமாக அன்புமணியை ஏதாவது ஒரு வகையில் விமர்சனம் செய்யும் செந்தில் இந்த முறை அமைதியாக இருக்கிறார் இதன் பின்னணியில் என்ன என்று தேடினால் செந்திலுக்கு கட்சிக்கு உள்ளேயே ஒரு தரப்பு எதிராக செயல்படுகிறதாம்.
குறிப்பாக செந்தில் பற்றிய செய்திகளை குறிப்பிட்ட கட்சி ஆதரவு நாளிதழ் மற்றும் செய்தி ஊடகத்தில் இருட்டடிப்பு செய்து வருகிறார்களாம், அவர் பெயரை கூட போடுவது இல்லையாம் இதில் கொடுமை என்னவென்றால் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் பெயர்களை கூட செய்திகளில் போடுபவர்கள், சொந்த கட்சி காரரான செந்தில் பெயரை ஒரு இடத்தில் கூட போடுவது இல்லையாம்.
இந்த சூழலில் செந்திலை ஓரம்கட்டும் இதே செய்தி நிறுவன தயாரிப்பு குழுதான் சூர்யாவின் அடுத்த திரைப்படமான எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிட இருக்கிறதாம், இதை மனதில் வைத்து தான் செந்தில் ஜெய்பீம் விவகாரத்தில் வாயே திறக்கவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாவம் மனுஷன் கட்சிக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் எப்படியெல்லாம் எதிர்க்கட்சியினரோடு சண்டை போடுவார் அவர் பெயரை கூட கட்சி நாளிதழில் போடாமல் இப்படி இருட்டடிப்பு செய்யலாமா?
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.