பத்திரிகையாளர் ஏகலைவன் காலம் ஒருநாள் திருப்பி தாக்கும் என திமுகவினரின் செயல்பாடுகளை சுட்டி காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார் இது குறித்து அவர் பகிர்ந்த முக்கிய தகவல் பின்வருமாறு :- முதல்வர் ஸ்டாலினையும், அவரின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் இலாகாவையும், தமிழகத்தில் உள்ள, எல்லா அரசியல் கட்சிகளும், தொண்டர்களும் மதிக்கின்றார்கள். ஏற்கிறார்கள்.
ஆனால் திமுக உடன் பிறப்புகள் மட்டும், ஏற்பதில்லை, மதிப்பதுமில்லை.கொரோனா நோய்த் தொற்று. அதற்கு முதல்வர்தான் கட்டுப்பாடுகளை விதிக்கின்றார். வேட்பாளரோடு சேர்ந்து மூன்று பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்கிறார். மற்ற எல்லா கட்சிகளும் அந்த விதிமுறைகளை பின்பற்றுகிறது. ஆனால் எல்லா இடங்களிலுமே திமுக உடன் பிறப்புகள் அதை மீறுகிறார்கள்.
தவறு யார் செய்தாலும் நான் நடவடிக்கை எடுப்பேன் என்கிற முதல்வர் அண்ணா மீதும் சத்தியம் செய்துவிட்டார். அவரது எண்ணம் ஒரு நல்லாட்சி தருவதாக இருக்கலாம். அந்த வழிநடத்தலுக்கு துணையிருக்கும் பொறுப்பு உடன் பிறப்புகளுக்கு இருக்க வேண்டும். அவர்களே மதிக்காமல் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சின்ன உதாரணம். நாகப்பட்டினம் 30 வார்டு. அங்கே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மூன்று பேருடன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யச் செல்கிறார். அதில் ஒருவர் இயக்குனரும் தமிழர் நலப்பேரியக்கத்தின் தலைவருமான சோழன் மு. களஞ்சியம். களஞ்சியம் உடன் இருந்தால் சிறப்பு என வேட்பாளர் நினைக்கின்றார். அதனால் கட்டுப்பாட்டோடு செல்கிறார்.
அங்கே இருந்த காவலர், ‘அந்த ஆளை வெளியே நிறுத்திவிட்டு நீங்க மட்டும் போங்க’ என்கிறார். படம்தான் எடுக்க வேண்டும் என்றால் சொல்லு, பிறகு அனுப்பி வைக்கின்றேன் என்கிறார். வேட்பாளர் கட்டுப்பட்டு களஞ்சியத்தை நிறுத்திவிட்டு உள்ளே செல்கிறார்.அதே நேரத்தில் திமுக வேட்பாளர்கள் ஐம்பது பேருக்கு மேலாக கூடி உள்ளே செல்கிறார்கள். அங்கே இருந்த காவலர்களும்-தேர்தல் அதிகாரிகளுமே ‘தேர்தல் விதிமுறைகளை’ கூறி 3 பேர் மட்டுமே என்கிறார்கள்.
எவனும் கேட்டபாடில்லை. எதிர்த்து பேசியபடியே உள்நுழைந்து, போன வேலையை முடிக்கிறார்கள். முதல்வரை, முதல்வரின் போலீஸ் இலாகாவை கொச்சைப்டுத்துவது உடன் பிறப்புகளின் வேண்டுதல் போல. சரி, இருக்கட்டும்.வேலூரில் என்ன நடந்தது?
தமிழக முதல்வரின் உத்தரவை ஏற்று, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 3 பேரோடு மட்டுமே செல்கிறார். அதே நேரத்தில் திமுக ஆட்கள் கூட்டமாக உள்ளே வந்துள்ளார்கள். இது விதிமுறை மீறள் என்று தேர்தல் அதிகாரியிடம் கூறுகிறார். முறைப்படி தேர்தல் அதிகாரியும், அங்கே இருந்த ‘முதல்வரின் போலீஸ்’ இலாகாவும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், என்ன நடந்தது ?
முதல்வரின் உத்தரவு மீறப்படுகிறது என்று சுட்டிக்காட்டிய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரையே ஓட ஓட விரட்டி தாக்கியது திமுக ‘ரவுடிகள்’ தரப்பு. இப்படி சொல்வது வருத்தம்தான். நம் கட்சியின் முதல்வர் உத்தரவு என மதித்திருந்தால் அவர்களை திமுக தொண்டர் எனலாம். மீறி வன்முறை அராஜகத்தில் ஈடு படுகிறார்கள் என்றால் ரவுதானே.பொதுவாகவே திமுக-விற்கு இந்த ‘ரவுடி இமேஜ்’ இருக்கின்றது. திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடியிசம் தலைதூக்கும், கட்டப்பஞ்சாயத்து கொடிகட்டும், வெட்டு குத்து கொலை, வன்முறைகள் தலைவிரித்தாடும் என எதிர்கட்சிகள் பேசும்.
இந்த முறை அப்படி ஏதும் இருக்கக்கூடாது. மக்களுக்கான விடியல் ஆட்சியாக இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் விரும்புவது ஒரு குற்றமா என தெரியவில்லை. அதை அவரின் சொந்த கட்சி உடன் பிறப்புகளே ஏற்கவில்லை. ஆளும் கட்சியாகிய நாம், உத்தரவுகளை எல்லாம் கடைபிடித்துக் கொண்டிருக்க முடியுமா என் நினைத்து விட்டார்கள்.பரவலாக எல்லா இடங்களிலுமே உத்தரவுகளை மீறியிருக்கிறார்கள். இதை முதல்வரின் கீழ் உள்ள காவல் துறை உள்ளிட்ட, அரச அதிகாரிகளுமே வேடிக்கை பார்த்திருக்கின்றார்கள். ‘விதிமுறைகளை கடைபிடிக்க வில்லை’ என தமிழ்நாடு தேர்தல் ஆணையமும் அவர்களின் மனுக்களை நிராகரிக்கப் போவதில்லை. தமிழ்நாடு தேர்தல் ஆனையத்திற்கு உசிரே போய்விடும்.
பல இங்களில் காவல் துறையினர் திமுக உடன் பிறப்புகளிடம், ‘வதிமுறைகளை மீறாதீர்கள்’ என கெஞ்சிப் பார்த்தும் வேலை நடக்கவில்லை. நீ என்ன மசிரு சொல்வது, நாங்க என்ன கேட்பது. ஆளுங் கட்சிடா..என்ற தொணியில் மீறிக் கொண்டே இருந்தார்கள். முதல்வரின் போலீசுக்கு அவ்வளவுதான் மரியாதை போல. தமிழக காவல் துறை தலைவர் டாக்டர் சைலேந்திரபாபு அவர்களுக்கு, திமுக உறுப்பினர் அட்டையை கொடுத்துவிட்டால் போகிறது என நினைத்து விட்டார்களோ…யாரறிவர்? (இப்படி சொல்வதற்காக
ஒரு பொய் கேஸ் ரெடிபண்ணிடாதீங்க சார்) இது எங்கள் ஆட்சி. என்ன வேண்டுமானாலும் செய்வோம். நடு ரோட்டில் அராஜகம் செய்வோம். காவல்துறையை மதிக்க மாட்டோம். எல்லோருக்கும் நாங்கள் போடுவதுதான் சட்டம். எங்களுக்கு கட்டுப்பட்டே எல்லாமும் இயங்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் உத்தரவாவது, மண்ணாங்கட்டியாவது…என உடன் பிறப்புகள் செயலாற்றிக் கொண்டிருந்தால்…
மீண்டும் ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு நீங்கள் கூப்பில்தான் உட்கார்ந்து கிடக்க வேண்டும். அடுத்த முறை நீங்கள் ‘பாஜக உள்ளே பூந்துரும்’னு சொல்லி ஓட்டுக் கேட்க முடியாது. ஸ்டாலின் கனவிலும், உதயநிதி கனவிலும் மண் அள்ளிப்போடுகிறீர்கள். பணமும் அதிகாரத் திமிரும் எப்போதும் கைகொடுக்காது.
நாம் தமிழர் கட்சியினர்-எளியோர்கள் மீதான உங்களின் வன்முறை ஒவ்வொன்றும், உங்களுக்கு நீங்களே வெட்டிக்கொள்ளும் சவக்குழியாகத்தான் முடியும். காலம் ஒரு நாள் அதை உணர்த்தும் குறிப்பு. முன்ன ஒரு காலத்தில இப்படித்தான், காவல்துறையினரை மதிக்காமல் ‘ஏவலர்களாக’ மதித்து, உதாசினப்படுத்தி, கேவலப்படுத்தி, காவல் நிலையத்திலேயே சென்று அராஜகம் எல்லாம் செய்தபடி இருந்தார்கள்.
அந்த காக்கிகளுக்கு ஒரு ’கோல்டன் வாய்ப்பு’ வந்தது. அப்படியான உடன் பிறப்புகளை எல்லாம் ஜெயிலில் வைத்து பிரித்து மேய்ந்து விட்டார்கள். அதற்கு பெயர்தான் ‘எமெர்ஜென்ஸி’.! காலம். சொல்லி வைத்து பழி தீர்த்துக் கொண்டது காவல்துறை. காலம் ஒரு நான் திருப்பித் தாக்கும் என்பது இதுதான்a. என குறிப்பிட்டுள்ளார் பத்திரிகையாளர் ஏகலைவன்.