கடந்த மாதம் கவிஞர் தாமரை பதிவிட்ட பதிவு ஒன்று இப்போது இணையத்தில் மிக வேகமாக பரவ தொடங்கியுள்ளது, பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வாயில் துணியை கட்டி போராட்டம் நடத்த போவதாக கே. எஸ். அழகிரி வெளியிட்ட அறிவிப்பை கடுமையாக கிண்டல் செய்து விமர்சனம் செய்துள்ளார் தாமரை.
இது குறித்து தாமரை பதிவிட்ட முக்கிய கருத்துக்கள் பின்வருமாறு 18.5.2022. கே.எஸ். அழகிரி என்னும்நாக்கில் சனி ! ஏன் 10 - 11 மணி மட்டும் ?? நிரந்தரமாகக் கட்டிக் கொண்டால் நாங்கள் தமிழர்களெல்லோரும் நிம்மதியாக இருப்போமே என அழகிரி வாயில் துணிக்கட்டும் போராட்டத்தை கிண்டல் செய்துள்ளார்.
மேலும் 31 ஆண்டுகள் சிறையில் கழித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் வாயிலாகவே வெளிவந்திருக்கிறார் பேரறிவாளன். எந்தக் குறுக்குவழியும் கிடையாது. மற்ற ஆறு பேர்க்கும்கூட அதுவேதான் வழிமுறை !. இந்திய சட்ட அமைப்பு அனுமதித்த வழிகளின்படிதானே வெளிவந்திருக்கிறார் ?? இதிலென்ன வயிற்றெரிச்சல் ??
எதை வைத்தாவது அரசியல் செய்ய வேண்டும், அதுதானே, கே.எஸ். அழகிரி அவர்களே ??? அறப்போராட்டம் செய்யப் போகிறாராம்...நாளை இதே 10 - 11 நானும் துணியை வாயில் கட்டிக் கொண்டு அறப்போராட்டம் நிகழ்த்தப் போகிறேன் ( வீட்டிலேயே )
காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதிப்படையினரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு நீதி கேட்டு.... விசாரணை தேவை, இழப்பீடு தேவை... உடன்படுபவர்கள் அவரவர் வீடுகளிலிருந்தே கலந்து கொள்ளலாம். என பதிவிட்டுள்ளார் தாமரை. மொத்தமாக வாயில் துணி கட்டுவது என்பது ஒருவர் இறந்த பிறகுதான் செய்யும் காரியம்.அப்படி இருக்க தாமரை எதை நினைத்து அவ்வாறு தெரிவித்தார் என காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.