நடிகர் கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் கருத்து குறித்து கருத்து தெரிவித்தார் அதில் இந்து என்ற ஒரு மதமே ராஜ. ராஜ சோழன் காலத்தில் இல்லை என்று தெரிவித்தார் கமல் அவ்வளவுதான் சமூக வலைத்தளங்களில் மிகவும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளனார் கமல். கருத்து சொல்லிய நாள் முதல் இரவு முழுவதும் பலத்த அடி விமர்சனங்களை சந்தித்தார்
கமல் குறித்து ராதாரவி முன்பே பேசிய வீடியோ ஒன்று வைரலானது.. இந்து இல்லை என்று கூறும் கமல் அமெரிக்காவில் அவர் பெயரில் ஹாசன் என இருப்பதை பார்த்து உள்ளே விடாமல் உட்கார வைத்துவிட்டார்கள் பின்பு நான் முஸ்லீம் இல்லை இந்து என்று கூறி வெளியே வந்தார் கமல் இப்படிப்பட்ட நபர்தான் இந்து இல்லை என இந்தியாவில் பேசுகிறார் கமல் என ராதாரவி முன்பு பேசிய வீடியோவை கமலுக்கு பதிலடியாக கொடுத்துள்ளனர்.
இந்த சூழலில்தான் கமல் தரப்பு திடீர் என ஒரு புது விளக்கத்தை கொடுத்து பல்டி அடித்துள்ளது, கமலின் நண்பரும், எழுத்தாளரும், ஓய்வுபெற்ற மத்திய அரசு செயலருமான பி.ஏ.கிருஷ்ணன் தன் 'பேஸ்புக்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:கமலுடன் கலந்துரையாடினேன். '10-ம் நுாற்றாண்டில், ராஜமுந்திரி என்ற இடம் இல்லை. அப்போது ராஜமகேந்திரவரம் என்று அழைக்கப்பட்டது.
அதுபோல எளிமையானதே ஹிந்து மதம் பற்றி, நான் சொன்ன கருத்து.'ராஜராஜ சோழன் காலத்தில், சிவனை வழிபட்டவர்கள், 'சைவர்' என்றும், விஷ்ணுவை வழிபட்டவர்கள் 'வைணவர்' என்றும் அழைக்கப்பட்டனர். இந்த மறுக்க முடியாத உண்மையைத் தான் கூறினேன். ஹிந்து மதம் இருப்பதை நான் மறுக்கவில்லை' என்று, என்னிடம் கமல் கூறினார். இதை பொதுவில் பகிர்ந்து கொள்ளவும் அனுமதித்தார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் இந்து மதம் என ஒன்று இல்லை என பேசிய கமல் தற்போது மீண்டும் பல்டி அடித்து இருக்கிறார் இதற்கு காரணம் வரும் காலங்களில் கமலின் திரைப்படங்கள் மற்றும் அரசியல் எதிர்காலம் இரண்டும் பாதிக்க படலாம் எனவும் இந்து மதம் குறித்து சர்ச்சையாக பேசிய பல நடிகர்கள் படங்கள் இந்திய அளவில் பைகாட் செய்யப்பட்டு தோல்வி அடையும் சூழலில் கமலுக்கும் எதிர்காலத்தில் அது போன்று நடைபெறலாம் என பயந்த காரணமாக உடனே கமல் தரப்பு இந்து மதம் குறித்து பேசிய கருத்தில் இருந்து பின்வாங்கி பல்டி அடித்ததாக கூறப்படுகிறது.