
ரேடியோ ஜாக்கி சுசித்ரா என்று பலரால் அழைக்கப்படுகின்ற சுசித்ரா தமிழ் மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர். எனது ஆரம்ப வாழ்க்கையில் ரேடியோ மெர்ச்சி எனப்படுகின்ற பண்பலை வானில் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் ரேடியோ ஒன் பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றி வருகிறார். பாடல்கள் மூலம் பலரையும் கவர்ந்து வந்த சுசித்ரா கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பெரும் சர்ச்சைக்குள் சிக்கினார். அதாவது தனது சமூக வலைதள பக்கத்தில் பல பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டார். இதனால் பல விமர்சனங்களை சந்தித்த சுசித்ரா அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை அந்த விவகாரத்தில் என்னை தேவையில்லாமல் இழுத்து விட்டார்கள் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கமல் குறித்து மிகப்பெரிய குற்றச்சாட்டை ஒன்றையும் முன் வைத்துள்ளார்.
அதாவது தனது முன்னாள் கணவர் கார்த்திக் மேடை மீது ஏறினாலே நாலு லைன் கொக்கின் அடிச்சிட்டு தான் வந்திருப்பார் என்று எல்லாருக்குமே தெரியும் என்றும் கமலஹாசனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்லும் பொழுது கொக்கையினை வெள்ளி தாம்பூலத்தில் கொண்டு வருவார்கள் அது வேண்டாம் என்று சொன்னதுக்கு என்ன வச்சு செஞ்சாங்க என்றும் பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார். இதைத் தவிர கோலிவுட்டில் போதை கலாச்சாரமானது தற்போது சகஜமாக இருக்கிறது என்றும் அதை எதிர்த்து சரத்குமார் மற்றும் ராதாரவி போன்றவர்கள் போராட முயன்று கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலைவிரித் ஆடி வருகிறது போதை பொருள் கடத்தலில் மன்னனை தமிழகத்தின் ஆட்சியில் இருந்த ஒரு கட்சியின் முக்கிய நிர்வாகி என்பதும் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சி அலைகள் இருந்து மீளாமல் இருக்க வைக்கிற நிலையில் சினிமா வட்டாரங்களில் போதை கலாச்சாரமானது இப்படி அதிகரித்து உள்ளது என்பதை சுசித்ரா பேட்டி ஒன்றில் கூறியுள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், இதற்கு தமிழக பாஜக துணை மாநில தலைவர் நாராயணன் திருப்பதி தனது சமூக வலைதள பக்கத்தில், குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர், நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடத்தும் கேளிக்கை விருந்துகளில் வெள்ளித் தாம்பாளத்தில் போதை பொருளான Cocaine (கொகைன்) அளிக்கப்படுகிறது என்று சர்வ சாதாரணமாக கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் அவருடைய முன்னாள் கணவர் Cocaine எடுத்து கொள்கிறார் என்றும் தமிழ் திரைப்பட உலகில் (Kollywood) போதை பொருள் என்பது சகஜமாக உள்ளது என்றும் கூறியிருப்பது தமிழகம் மற்றும் திரை உலகம் திசை மாறி செல்கிறது என்பதை உணர்த்துகிறது.
ஒரு நேர்காணலில் பெண் போலீசார் குறித்து பேசியதற்கு பேட்டி அளித்தவரையும், பேட்டி எடுத்தவரையும் கைது செய்த தமிழக காவல்துறை, இந்த நேர்காணலில் சுசித்ரா போதை பொருள் குறித்து பேசிய விஷயங்களை அலட்சியப்படுத்தாமல் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். அவர் குறிப்பிட்டவைகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அவர் கூறியதில் அடிப்படை ஆதாரமிருந்தால், கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தின் மிகச்சிறந்த நடிகரும், அரசியல் கட்சியின் தலைவருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக பேச முன்வர வேண்டும். சுசித்ரா கூறியதில் உண்மையில்லையெனில், மறுப்பு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் மீது புகார் அளித்து வழக்கு தொடுக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் தற்போது விமர்னங்கள் எழுந்துள்ளன...