கனல் கண்ணன் சிறையில் இருந்து வெளிவந்தவுடன் இந்துக்களுக்காக சிறை சென்றதில் மகிழ்ச்சி இனி தீவிரமாக இந்துக்களுக்காக போராடுவேன் என சொல்லி சென்றார். இது கனல் கண்ணன் ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது அதே நேரம் கனல் கண்ணன் எதிர்பாலர்களை குறிப்பாக பெரியாரியஸ்ட்களை கவலை அடைய செய்தது.
இந்த சூழலில் கனல் கண்ணன் ஜாமினில் வெளிவந்து இருப்பதால் அவர் எந்தவித அரசியல் நகர்வையும் மேற்கொள்ள மாட்டார், நிச்சயம் அடக்கி வாசிப்பார் என பெரியாரியஸ்டகள் எதிர்பார்த்து இருந்தனர் இந்த சூழலில்தான் சொன்னது போல் ஆட்டத்தை தொடங்கியுள்ளார் கனல் கண்ணன்.
சிறையில் இருந்தபோது கனல் கண்ணனுக்கு ஆதரவாக செயல்பட்ட அரசியல் தலைவர்கள், தனி அமைப்பை சேர்ந்தவர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் பயணத்தை தொடங்கியுள்ளார் கனல் கண்ணன், இந்த சூழலில் சென்னை கமலாலயம் சென்ற கனல் கண்ணன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அப்போது அண்ணாமலை எப்போதும் தேசியவாதிகள் பக்கம் பாஜக நிற்கும் என்றும் அண்ணன் நீங்கள் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ஸ்டண்ட் செய்துள்ளீர்கள் என குறிப்பிட்டதாக கூறப்படுகிறது, அதன் பிறகு மத்திய இணை அமைச்சர் முருகனை கனல் கண்ணன் சந்தித்து நன்றி தெரிவித்தார், முருகன் கனல் கண்ணனை நீங்கள் நிஜ ஹீரோ என வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
தொடர்ந்து கனல் கண்ணன் பல்வேறு பிரபலங்களை சந்தித்து தனக்கு ஆதரவாக இருந்ததற்கு நன்றி தெரிவிக்க இருக்கிறாராம், இது தான் பெரியாரிஸ்ட்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது, கனல் கண்ணன் பேசியதை அன்றோடு விட்டு இருந்தால், கனல் கண்ணன் ஒரு நாள் பேசியதோடு தனது வேலையை பார்க்க சென்று இருப்பார்.
அவரை கைது செய்யவேண்டும் பெரியாரிஸ்ட் அமைப்புகள் புகார் கொடுத்து, அதன் படி அண்டை மாநிலம் சென்று கைது செய்து சிறையில் அடைத்தது தமிழக காவல்துறை, ஆனால் தற்போது சிறை வாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளிவந்த கனல் கண்ணன் முழு நேர இந்து முன்னணி பணியில் ஈடுபட இருக்கிறாராம்.
சும்மா இருத்தவனை சீண்டி ஹீரோ ஆக்கிடீங்க என சிவாஜி படத்தில் வசனம் வரும் அதே போல் அமைதியாக மேடையில் மட்டும் எப்போதாவது பேசிவிட்டு, தனது பணியை பார்க்க சென்று கொண்டு இருந்த கனல் கண்ணனை கைது என்ற ஆயுதம் மூலம் முடக்க நினைத்து தற்போது அவரை ஹீரோவாக மாற்றி இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
இனி கனல் கண்ணன் மட்டுமல்ல பல கனல் கண்ணங்களை உருவாக இருப்பதால் அவர்களை எப்படி கையாள போகிறது இந்த திராவிட மாடல் விடியல் அரசு என இந்து முன்னணி அமைப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மொத்தத்தில் சிறையில் இருந்து வெளிவந்தவுடன் கனல் கண்ணன் இந்துக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என தெரிவித்தது போன்று தீவிரமாக களத்தில் இறங்கி இருப்பது அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.