நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு கனல் கண்ணனை கைது செய்துள்ளது தமிழக காவல்துறை இந்த சூழலில் கனல் கண்ணனை கைது செய்த சூழலிலும் தாங்கள் நினைத்தது நடக்கவில்லையே என அவரது கைதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது அப்படி என்ன நடந்தது என பார்க்கலாம்.,
பெரியாரிஸ்ட் அமைப்புகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
இதையடுத்து கனல் கண்ணனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே கனல் கண்ணன் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தனது நியாயத்தை அதிரடியாக குறிப்பிட்டு இருந்தார்.
காவல்துறையின் தீவிரமான எதிர்ப்பை தொடர்ந்து அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த கனல் கண்ணனை சென்னை தனிப்படை போலீசார் பேச்சு வார்த்தைக்கு பின்னர் கைது செய்தனர்.
கனல் கண்ணன் பற்றிய தகவல் அறிந்த சென்னை சைபர் கிரைம் தனிப்படை போலீசார் விழுப்புரம் மாவட்ட போலீசார் உதவியுடன் கனல் கண்ணனை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
இதனையடுத்து எழும்பூர் 12வது நீதிமன்ற நீதிபதி லட்சுமி முன்பு கனல் கண்ணனை போலீசார் ஆஜர் படுத்தினர். அப்போது கனல் கண்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைக்கும் வகையில் பெரியார் சிலையை அகற்றுமாறும், மற்ற மாநிலங்களை போல் தமிழ்நாட்டிலும் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருமாறு மட்டுமே கனல் கண்ணன் பேசியதாக வாதிட்டனர்.
காவல்துறை தரப்பில் கனல் கண்ணனுக்கு முன் ஜாமீன் கொடுத்தால் பலரும் தொடர்ச்சியாக பெரியார் சிலை குறித்து பேசுவார்கள் என எதிர்ப்பு தெரிவித்து வழக்கின் தீவிரம் குறித்து வாதங்களை முன் வைத்தனர்.
இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி லட்சுமி வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை கனல் கண்ணனை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் இந்த சூழலில் கனல் கண்ணன் ஜாமினில் எடுக்கவும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கனல் கண்ணன் கைது பெரியார் சிலையை அகற்றுவோம் என பேசுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும் என்று பெரியாரிஸ்ட்கள் பிரச்சாரம் செய்து வந்தனர், ஆனால் கனல் கண்ணனுக்கு சிறையில் A கிளாஸ் வசதி கொடுக்கப்பட்டு இருப்பதுபெரியாரிஸ்ட்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கைது நடவடிக்கை பாடமாக இருக்கும் பெரியாரிஸ்ட்கள் என எதிர்பார்த்த நிலையில் கனல் கண்ணனுக்கு முதல் தர வசதி கொடுக்கப்பட்டு இருப்பது தூக்கத்தை கெடுத்துள்ளது, இதே நேரத்தில் கனல் கண்ணனை கைது செய்த தமிழக காவல்துறை சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டவனை ஏன் கைது செய்யவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர்.
மொத்தத்தில் கனல் கண்ணன் சாமானிய மக்களிடையே பெரியார் சிலையில் எழுதியுள்ள வாசகங்கள் குறித்து கொண்டு சேர்த்து இருப்பதால் இனி எந்த பெரியார் சிலையும் கோவிலுக்கு எதிரே வைக்க எந்த காலத்திலும் யாரும் முன் வர மாட்டார்கள் என்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது.