கிடுகு என்ற திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது அந்த திரைப்படத்தின் ட்ரைலரில் இடம்பெற்ற வாசகங்கள் ஒவ்வொன்றும் திராவிட மாடலையும், பெரியாரிய கொள்கை மற்றும் மத மாற்றம் குறித்து அடித்து நொறுக்குகிறது.
முதன் முதலில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்றது ஒரு பூணூல் போட்ட பிராமணன் என தொடங்கும் ட்ரைலரில், மருது பாண்டியர்களுக்கு சிவகங்கையில் இடமில்லை ஆனால் சுதந்திரமே வேண்டாம் என்ற பெரியாருக்கு எதற்கு சிலை என நாயகன் கேள்வி கேட்பது போல் காட்சிகள் உள்ளன.
மேலும் இப்போது காதல் கல்யாணம் தாலி கட்டு என என் பெண்ணிற்கு தாலி காட்டுவார்கள், நாளை என் பெண்ணிற்கு தாலி அடிமை என தாலியை அருப்பார்கள் என பெரியாரிஸ்ட்களை நேரடியாக திரைப்படத்தில் வைத்து செய்து இருக்கிறார்கள், திரைப்படத்தில் வரும் காவலர் ஒருவர் தன்னை திராவிடன் என அடையாள படுத்துவது தொடங்கி ஒட்டு மொத்த திரைப்படமும் இந்துக்களின் பார்வையில் கேள்வியாக வந்து இருப்பதாக கூறப்படுகிறது.
மொத்தத்தில் இந்துக்கள் பார்வையில் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக திரைப்படங்கள் வெளியாவது ஆச்சர்யத்தை உண்டாக்கி இருக்கிறது, அதே நேரத்தில் கிடுகு திரைப்படம் வெளியானால் அது பெரும் பின்விளைவுகளை தங்களுக்கு கொடுக்கும் என்பதால் இப்போதே பெரியாரிஸ்ட்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்களாம். வைரலாகும் ட்ரைலர் சங்கநாதம் எனும் யூடுப் சேனலில் வெளியாகி இருக்கிறது, வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.