Cinema

நெத்தி அடி நிஜத்திலும் மாஸ்டர் என நிரூபித்த கனல் கண்ணன் நீதிமன்றத்தில் அதிரடி !

Cinema master kanal kannan
Cinema master kanal kannan

நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி கனல் கண்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழக காவல்துறை மீதும் பெரியார் சிலையில் எழுதியுள்ள வாசகங்கள் மீதும் அதிரடியாக தனது கருத்தை தெரிவித்துள்ளார், முன் ஜாமீன் கோரி கனல் கண்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டதாவது,


இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசிக்க வரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வாசலில், கடவுளை கொச்சைபடுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலையும், அந்த வாசகங்களும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும்,

அதனாலயே அந்த சிலையை  இடிக்க வேண்டுமென பேசியதாகவும், தான் பேசியது இந்திய சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் ஶ்ரீரங்கம் கோயில் முன் சிலை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும். சிவ பெருமானை அவதூறாக பேசி ஹிந்துக்களின் நம்பிக்கைகளை புண்படுத்திய 'யூ டூ புரூட்டஸ்' மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்ற தெரிவித்துள்ளதாகவும், துரதிஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கனல் கண்ணன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜாமின் மனு மீதான விசாரணை நாளை அல்லது நாளை மறுதினம் விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது, கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்ய சென்று இப்போது பெரியார் சிலையை கோவில் வாசலில் நிறுவியது உட்பட, அதில் இடம்பெற்று இருக்கும் வாசகங்கள் வரை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதால் பெரியாரிஸ்ட்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

அதிரடியாக தனது மனுவில் கனல் கண்ணன் குறிப்பிட்ட தகவலால் சினிமாவில் மட்டுமல்ல உண்மையிலும் மாஸ்டர் என்பதை நிரூபித்துள்ளார் கனல் கண்ணன் என்கின்றனர் இந்து அமைப்புகள்.