நடிகர் சூர்யா குடும்பத்தினரின் முந்தைய பேச்சு கடும் பின்விளைவுகளை தற்போது உண்டாக்கி இருக்கிறது, நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் விமர்சனம் ரீதியாக வெற்றி பெற்றது, அதே நேரத்தில் அந்த திரைப்படம் பெரும் பின் விளைவுகளை சூர்யாவிற்கு பெற்று தந்தது.
வன்னியர் சமுதாய தலைவர்கள் பலரும் ஜெய்பீம் திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த காலண்டர் வேண்டும் என்றே அடையாள படுத்தப்பட்டது என எதிர்ப்பு தெரிவிக்க வேறு வழியின்றி காலண்டரில் இடம்பெற்ற வன்னியர் அடையாளத்தை மாற்றியது படக்குழு. அதன் பிறகு அங்கு இந்து அடையாளம் கொண்ட காலண்டர் இடம்பெற்றதும் கடும் சர்ச்சையை உண்டாக்கியது.
இந்த சூழலில் வன்னியர் அமைப்புகள் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் திரைப்படத்தை புறக்கணிக்க இருப்பதாக தெரிவித்தனர், அதன் பிறகு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன திரைப்படம் வட மாவட்டங்களில் வெளியாவதில் சிக்கல் உண்டானது, ஆனால் ஆளும் கட்சியின் வலது கரமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்ததால் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பெரும் எதிர்ப்புகள் இன்றி வெளியானது.
ஆனால் இந்த முறை சூர்யா தயாரித்து இருக்கும் படம் விருமன் இது முழுக்க முழுக்க சூர்யா குடும்பத்தின் தயாரிப்பு என்பதால் வட மாவட்டங்களில் படத்தை புறக்கணிக்க வன்னியர் அமைப்புகள் முடிவு செய்து இருக்கிறதாம், இது ஒருபுறம் என்றால் சூர்யாவின் தந்தை சிவகுமார், சூர்யாவின் மனைவி ஜோதிகா, சூர்யாவின் நண்பர் நடிகர் சூரி போன்றோரின் பேச்சுக்கள் கடும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.
கோவில் கட்டுவதை காட்டிலும் பள்ளி கூடங்கள் கட்டுவது சிறந்தது என்றும் படிக்க வைப்பது சிறந்தது என்றும் தொடர்ச்சியாக சூர்யாவை சார்ந்தவர்கள் பேசி வருகிறார்கள், இதனால் கோவில்களை குறிவைத்து சூர்யா தரப்பினர் பேசி வருவதில் உள் நோக்கம் இருப்பதாக இந்து அமைப்புகள் சந்தேகிக்கின்றன.
ஏன் எப்போது பார்த்தாலும் கோவில் மீதே சூர்யா குடும்பத்தினருக்கு கண்கள் இருக்கின்றன, எப்போவாவது சினிமா தியேட்டர் கட்டுவதற்கு பதில் பள்ளி கூடம் கட்டாலம் என சூர்யா தரப்பு பேசி இருக்கிறதா? சர்ச் மசூதி குறித்து எடுத்துக்காட்டாக பேச மாட்டார்களா என இந்து அமைப்புகள் கேள்வி எழுப்புகின்றன.
மொத்தத்தில் பல அமைப்புகளும் விருமன் திரைப்படத்தை புறக்கணிக்க இருப்பதாக முடிவு எடுத்து இருப்பதால் கடும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறதாம் சூர்யா குடும்பம். சில தன்னார்வ அமைப்புகள் சூர்யா தயாரிப்பில் வெளியாக இருக்கும் விருமன் திரைப்படத்தை புறக்கணித்து அந்த திரைப்படத்தை பார்க்க ஆகும் செலவில் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்ய இருக்கிறார்களாம். சூர்யா குடும்பம் தொடங்கி வைத்த விளம்பர யுக்தி இப்போது அவர்களை பன்மடங்காக திருப்பி அடிக்க. காத்து இருக்கிறதாம்.