Tamilnadu

உங்களுக்கு வாக்கு சேகரித்ததை நினைத்து வெட்கமாக இருக்கு ஈஸ்வரனுக்கு கொங்கு இளைஞர் பதில்

Kongu eeswaran
Kongu eeswaran

தாய் நாடு வாழ்க என பொருள்படும் படி ஜெய்ஹிந்த் என கூறும் சொல்லால் தமிழகம் தலை குனிந்தது என்ற விளக்கம் பொருள்படும் படி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் கொங்கு நாடு மக்கள் கட்சியின் நிறுவனர் ஈஸ்வரன்.


சட்டசபையில் ஆளுநர் உரை மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய திமுக சின்னத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்கு ஈஸ்வரன் ஆளுநர் உரையில் இந்த ஆண்டு ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இல்லை என்றும் கடந்த அதிமுக ஆட்சியில் ஜெய் ஹிந்த் என்ற வார்த்தை இருந்ததாகவும், இது ஒன்றே போதும் தமிழக அரசு தலை நிமிர்ந்துள்ளது என சர்ச்சையாக பேசினார்.

இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது, இந்நிலையில் கொங்கு ஈஸ்வரனுக்கு வாட்சப் செயலியில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த இளைஞர் சுந்தர் ராஜு தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார் அதில் :- 

ஓர் சட்டமன்ற உறுப்பினர் என்ற மரியாதைக்காக உங்களுக்கு எனது வணக்கம். எந்த அடிப்படையில் ஜெய்ஹிந்த் என்ற உணர்ச்சி மிகுந்த வார்த்தை உங்களை தலைகுனிய வைத்தது என்று பேசியிருக்கிறீர்கள்? ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளும் வார்த்தை ஜெய்ஹிந்த். இந்தியர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வார்த்தை ஜெய்ஹிந்த்.  

கொங்கு நாட்டிலே, கொங்கு சமுதாய மக்கள் அனைவரும் தேசத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட மக்களாகத்தான் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். மாவீரன் தீரன் சின்னமலை வழித்தோன்றல்கள் யாரிடமிருந்தும் இப்படி ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையால் தலைக்குனிவு என்ற எண்ணம் ஏற்படாது. 

தங்களுக்காக கடந்த 2014 பொள்ளாச்சி சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் எங்களது கிராமத்தில் 834 ஓட்டுக்கள் வாங்க கடுமையாக உழைத்தவன் என்கிற முறையில் தங்களிடம் எனது கேள்வியை வைக்க உரிமை இருக்கிறது. இன்று அப்படி உழைத்ததற்காக வெட்கப்படுகிறேன்.  

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை கூறுவதால் தலைக்குனிவு ஏற்படும் என்று நான் சட்டசபையில் பேசியது தவறு என்று பகிரங்கமாக இந்திய மக்களிடம், குறிப்பாக கொங்கு நாட்டில் தங்களுக்கு வாக்களித்த அப்பாவி இந்திய குடிமகன்களிடம் மன்னிப்பு கேளுங்கள். 

இந்த தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு இந்தியனின் மனதையும் புண்படுத்தியுள்ளீர்கள். இந்த தேச விடுதலைக்காக தன் இன்னுயிரை இழந்த அரசர்கள், வீரர்கள், தலைவர்கள், தீரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அவமானப்படுத்தியிருக்கிறீர்கள். அவர்கள் ஆன்மா தங்களை மன்னிக்காது. குறிப்பாக தீரன் சின்னமலைக்கவுண்டர் ஆன்மா தங்களை நிச்சயம் மன்னிக்காது.... ஜெய் ஹிந்த் என குறிப்பிட்டுள்ளார்.