தமிழகத்தில் நடைபெறும் செயல்கள் முழுவதும் பிரிவினைவாத போக்கிற்கு தூவம் போடும் வகையில் அமைந்து வருவதும் அதனை உறுதி படுத்தும் வகையில் தமிழக முதல்வர் பொறுப்பில் அங்கம் வகிக்கும் ஸ்டாலின் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்போம் என பேசுவதும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
போதாத குறைக்கு ஆளுநர் உரையில் ஒன்றிய அரசு என இருப்பதை சுட்டிக்காட்டியும், தமிழக அரசு கொடுத்த ஆளுநர் உரையை ஆளுநர் தணிக்கை செய்யவில்லை என்றும் அப்படியே வாசித்து இருக்கிறார் என ஆளுநர் மீது குற்றம் சுமத்தப்பட்டது, இது குறித்து உள்துறை அமைச்சகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆளுநர் தரப்பில் தமிழக தலைமை செயலாளர் கொடுத்த முதல் அறிக்கையில் வேளாண் சட்டம் குறித்து இடம்பெற்ற வாசகங்கள், மற்றும் மத்திய அரசிற்கு எதிராக இருந்த வாசகங்களை நீக்க அறிவுறுத்தினேன், அதன் பிறகு வந்த உரையைதான் வாசித்தேன், ஆளுநர் உரையில் ஜெய் ஹிந்த் இல்லாதது குறித்து கேள்விக்கு ஆளுநர் விளக்கம் கொடுக்கவில்லை.
இந்நிலையில் தமிழகத்திற்கு துடிப்புடன் செயல்படும் இளம் ஆளுநர் ஒருவரை நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகம் தயாராகிவிட்டதாகவும், இது குறித்து ஆளுநர் பன்வாரிலால் அவர்களுக்கு முறைப்படி தெரிகிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது, தொடர்ந்து தனது தவறை மறைக்க மொழி உரிமை,மாநில உரிமை என கையில் எடுக்கும் ஸ்டாலினுக்கு அரசியல் சாசன. சட்டம் என்ன சொல்கிறது என பாடம் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.
அதன்படி இனி முழுமையாக ஆளுநர் அதிகாரங்கள் பயன்படுத்த படும் எனவும் வருகின்ற புதிய ஆளுநர், தமிழ் தெரிந்தவறாக இருந்தால் இன்னும் நலன் என மத்திய அரசு நினத்திருக்கிறது எனவும், காஷ்மீர் விவகாரம் முடிந்த பின்பு மத்திய அரசின் முழு கவனமும் தமிழகம் பக்கம் திரும்பும் எனவும் கூறப்படுகிறது.
மத்திய அரசிற்கு மாநில அதிகாரம் என்னவென்று காட்ட முயற்சிக்கும் ஸ்டாலினுக்கு மத்திய அரசின் அதிகாரம் என்னவென்று காட்ட தயாராகிவிட்டது மத்திய அரசு என்பதே தற்போதைய ஹாட் டாபிக்காக இருக்கிறது.