நாளுக்கு நாள் தமிழகத்தில் பிரிவினைவாத கோஷம் அதிகரித்து வருவதாகவும் அதற்கு ஆளும் திமுக அரசாங்கம் முக்கிய துணை புரிவதாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன, ஒன்றிய அரசு என திமுக புது முழக்கத்தை கையில் எடுத்து பேசிவரும் நிலையில் நேற்றைய தினம் திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற கொங்கு ஈஸ்வரனின் பேச்சு கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இல்லாததால் தமிழகம் தலை நிமிர்ந்து விட்டதாக, முழுக்க முழுக்க பிரிவினைவாதம் பொருளில் பேசியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது, ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை தமிழரான செண்பகராமன் பிள்ளை என்றவர் முதலில் முழங்கியதாக கூறப்படும் நிலையில் சட்டமன்றத்தில் வைத்து இந்திய அரசியல் சாசனத்தின் மீது பதவி பிரமாணம் செய்து கொண்டு சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு ஏற்று கொண்ட ஒருவர் இவ்வாறு பேசலாமா எனவும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
கொங்கு ஈஸ்வரனின் இந்த பேச்சை தமிழக முதல்வர் பதவியில் அமந்துள்ள ஸ்டாலின் ரசித்து வருவதாகவும் கூறப்படுகிறது, இந்த நிலையில் மாரிதாஸ் திமுகவிற்கு சவால் விடுத்துள்ளார் அதில் :- ஜெய் ஹிந்த்.
வாழ்க பாரத தேசம்.திமுக முடிந்தால் திராவிட நாடு கோஷம் போடு பார்க்கலாம்.இது பாரத தேசம்உன்னை போல் பல ஆயிரம் பேர் பார்த்தாகிவிட்டது. காஷ்மீர் பிரிவினைவாதிகளையே ஒடுக்கியாச்சு கருணாநிதி கும்பலுக்கு என்ன இருக்கு கொள்கை? அடக்க முடியாத யானை தானே திமுக! எங்கே பிரிவினை பேசு. பார்க்கலாம் உன் வீரத்தை காட்டு என சவால் விடுத்துள்ளார்.
இந்நிலையில் பலரும் திமுகவிற்கு கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர் அதில் 2008 ஆம் ஆண்டு ஈழத்தில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக சாகும் போது அப்போதைய காங்கிரஸ் அரசை ஒன்றிய அரசு என்று சொல்லாத திமுக காவேரி மேலாண்மை அமைக்காமல் காலம் தாழ்த்திய அப்போதைய காங்கிரஸ் அரசை ஒன்றிய அரசு என்று சொல்லாத திமுக
முல்லை பெரியார் அணையின் உயரத்தை உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அள்ளித்தா பிறகும் , அதை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்திய அப்போதைய காங்கிரஸ் அரசை ஒன்றிய என்று அரசு சொல்லாத திமுக இரண்டு முறை திமுக ஆட்சியை கலைந்த காங்கிரஸ் ஆளும்போது சொல்லாத ஒன்றிய அரசு
இரண்டு முறை திமுக ஆட்சியை கலைந்த காங்கிரஸ் ஆளும்போது சொல்லாத ஒன்றிய அரசு இப்போது ஒன்றிய அரசு என்று சொல்லும் காரணம் என்ன எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.