நேற்று நம் TNNEWS24-ல் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவு.. வேலை செய்தது அண்ணாமலை 'மேஜிக்' என்ற தலைப்பில் பல்வேறு தகவல்களை அளித்து இருந்தோம் அது தற்போது அமைச்சர் சேகர் பாபு பேட்டியின் மூலம் உறுதியாகியுள்ளது.தமிழகத்தில் பிரசித்த பெற்ற கோவில்களில் சிலைகள் மற்றும் நகைகளை பாதுகாக்க ஸ்டராங் ரூம் அமைப்பது குறித்த ஆய்வை மேற்கொள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு ஆய்விற்கு சென்று இருந்தார், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் "சேகர் பாபு".
அப்போது துறை சார்ந்த கேள்விகளை அவரிடம் முன்வைத்தனர் பத்திரிகையாளர்கள் குறிப்பாக, சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக நிர்வாகம் நடந்து கொள்வதாக வீடியோ வெளியானது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அது குறித்து கோவில் நிர்வாகத்திடம் விளக்கம் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.அதோடு வடபழனி முருகன் கோவிலில் எப்போது திருப்பணிகள் முடியும் சரியாக நாளை உங்கள் வாயால் சொல்லுங்கள் என பக்தர் ஒருவர் கேட்க,
விரைவில் தங்க கொடிமர பணிகள் முடிவடைந்ததும் திறக்கப்படும் என தெரிவித்தார், அதோடு மீண்டும் நாளை சொல்லுங்கள் என அங்கு இருந்த பக்தர் ஒருவர் கேட்க இது பிரஸ் மீட்டுங்க பிரஸ் மீட்டுங்க என அவரை ஆப் செய்தார் அமைச்சர்.இதனையடுத்து பெண் நிருபர் ஒருவர் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகமீது கைவைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுப்போம் என கூறியுள்ளார் அதற்கு உங்கள் பதில் என்ன என கேட்டார் நிருபர்.
முதலில் அண்ணாமலை கொடுத்த பேட்டியை நான் முழுமையாக பார்த்தேன் அண்ணாமலை குறித்து நிருபர்கள் நீங்கள்தான் என்னிடம் அந்த கேள்வியை கேட்டீர்கள் அவர் மீது கைவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் சொல்லவில்லை, அன்பாகவும் கைவைக்கலாம், கீழே நிலை தடுமாறுபவரை தாங்கவும் கைவைக்கலாம் அவ்வாறு எடுத்து கொள்ளலாம் என பிளேட்டை மாற்றிவிட்டார் அமைச்சர்.
எங்களுக்கு முதல்வர் யாரையும் கடுமையான வார்த்தைகளால் பேசவேண்டாம் எனவும், துறை சார்ந்த கேள்விக்கு மட்டுமே பத்திரிகையாளர்களை சந்தித்து பதில் அளிக்க அறிவுறுத்தி இருக்கிறார் எனவும் வழக்கமாக ஆவேசமாக பேசக்கூடிய அமைச்சர் சேகர் பாபு இந்த முறை பம்மி பேசினார் அமைச்சர் சேகர் பாபு.
முதல்வர் அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவு என நேற்றே tnnews24 செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது , இன்று அமைச்சர் தெரிவித்த கருத்தும் நம் செய்தியை உறுதி செய்துள்ளது. அதனை படிக்க கிளிக். அமைச்சர் சேகர் பாபு அளித்த இன்றைய பேட்டியை பார்க்க கிளிக்.