முன்னாள் மது ஒழிப்பு போராளியாகவும் தற்போதைய பாஜக எதிர்ப்பு போராளியாகவும் அறியப்படுபவர் நந்தினி, நந்தினி குடும்பத்தினரான நந்தினி தந்தை, கணவர், சகோதரி என குடும்பமாக பாஜக எதிர்ப்பை மட்டுமே கையில் எடுத்து மதுரை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதிலும் கையில் போர்டுடன் நந்தினி குடும்பத்தினர் நடத்தும் போராட்டங்கள் வேறு ரகம், இந்த நிலையில் சமீபத்தில் அமைச்சர் சேகர் பாபுவிற்கு அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார், பாஜக மீது கைவைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுப்போம், 17 மாநிலங்கள் மற்றும் மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் எங்கள் பதிலடி எப்படி இருக்கும் என சேகர்பாபுவிற்கு தெரியவைப்போம் என எச்சரிக்கை விடுத்தார் அண்ணாமலை.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு இன்று வீடியோ வெளியிட்டுள்ளார், அதில் அண்ணாமலை 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம் என பேசியது பயத்தின் வெளிப்பாடு, பாஜகவினர் மோசடியாக வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தி வெற்றி பெற்று உள்ளனர், அவர்கள் வாக்கு சீட்டில் தேர்தல் நடந்தால் தோல்வியை தழுவுவார்கள், தைரியம் இருந்தால் அதை முதலில் செய்யுங்கள் என மூச்சை பிடித்து வாய் கிழிய கிழிய பேசினார் நந்தினி.
இந்நிலையில் நந்தினிக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்துள்ளனர், இந்தியாவில் பாஜகவை எதிர்க்கும் கட்சிகளில் திமுகவும் ஒன்று எப்படி திமுக வாக்கு சீட்டு பயன்படுத்தி நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது, பாஜக கூட்டணி தோற்றது என கேட்டால் நந்தினியிடம் பதில் இருக்காது, போகிற போக்கில் பொய்யை பரப்புவதுதான் நந்தினி குடும்பத்தின் தற்போதைய செயலே.
நந்தினி பரப்பிய போலி செய்தியை அடையாளம் கண்ட பாஜகவினர் அவரது பதவிற்கு கீழே, நந்தினி குடும்பத்தினர் பரப்பும் பொய்களை பட்டியல் இட்டனர், இதனால் நந்தினியின் சுயரூபம் வெளிவந்தது, பதறிய நந்தினி கமெண்ட் பாக்ஸை ஆப் செய்துவிட்டார், பிரதமர், பாஜகவினர், தேர்தல் ஆணையம், அண்ணாமலை என அனைவருக்கும் சவால் விடும் நந்தினி முதலில் சமூக வலைத்தளத்தில் கமெண்ட் பாக்ஸை ஓபன் செய்ய சொல்லுங்கள் அப்புறம் தெரியும் என பதிலடி கொடுத்துள்ளனர்.
சுருக்கமாக சொல்லப்போனால் வாக்கு சீட்டில் தேர்தல் நடத்தினால் வெற்றி பெற முடியுமா என கேட்கும் நீ முதலில் கமெண்ட் பாக்ஸை ஓபன் செய் அப்புறம் பதில் சொல்கிறோம் என ஒரே வரியில் சுருக்கமாக சொல்லாமல் சொல்லிவிட்டனர் . நந்தினி சவால்விட்ட விட்ட வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும் .