Cinema

கவனித்தீரா 'மத்திய அரசு' "மத்திய அரசு" தான் விருது கொடுக்குது ! ஒரு வார்த்தை சொன்னா 100 வார்த்தை சொன்ன மாதிரி ! 

Rajini kanth
Rajini kanth

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசு என்பதனை ஒன்றிய அரசு என குறிப்பிட்டு அழைத்து வந்தது. இப்படிஒரு தருணத்தில் நேற்று ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கும் போது மத்திய அரசு விருது வழங்குகிறது என குறிப்பிட்டுள்ளார். அதாவது அவர் ஒன்றிய அரசு என்பதனை ஏற்கவில்லை என்ற பொருள்படும்படி இருப்பதாக திமுக ஆதரவாளர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணி இருக்கின்றது.


கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, பின்னர் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார், அந்த வகையில் மத்திய அரசை ஒன்றிய அரசு என தான் அழைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி மற்ற அமைச்சர்கள் திமுக ஆதரவு கட்சிகள் என அனைவரும் ஒன்றிய அரசு என்று அழைத்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் திமுக ஆதரவு ஊடகங்களும் ஒன்றிய அரசு என்றுதான் குறிப்பிடுகிறது.

ஆனாலும் ஒரு சில ஊடகங்கள் மற்றும் சில கட்சியினர் மத்திய அரசு என்றுதான் இன்றுவரை அழைத்து வருகின்றனர். மேலும் ஒன்றிய அரசு என்பதற்கு விளக்கம் தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் பல மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு தான் இந்திய அரசியல் அமைப்பில் இருக்கின்றது. எனவே மத்திய அரசை இனி ஒன்றிய அரசு என அழைக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது திமுக. இதில் குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிய அரசு என்பதற்கு முழு ஆதரவு கொடுத்து உள்ளனர்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, மத்திய அரசை ஒன்றிய அரசு என சொல்வது மத்திய அரசை சிறுமை படுத்துவதற்கான பொருள் என பன்னீர் செல்வமும், மத்திய அரசை ஒன்றிய அரசு என சொன்னால் அதன் அதிகாரம் குறைந்துவிடுமா? இல்லை தமிழக அரசு மத்திய அரசை விட அதிகாரம் கொண்ட பெரிய அரசாக மாறி விடுமா ?என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், மத்திய அரசு வழங்கும் "தாதா சாகேப் பால்கே விருது" நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று வழங்கப்பட்டது.

இதனை பெற்றுக் கொள்வதற்காக நேற்று சென்னையிலிருந்து டெல்லி புறப்படும் போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மத்திய அரசிடமிருந்து இந்த விருது பெறுவதற்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றார். இதன் மூலம் "ஒன்றிய அரசு" கிடையாது. மத்திய அரசுதான் என்பதனை அவர் முழுவதும் ஏற்றுக் கொண்டு இருக்கிறார் என்பதனை தெளிவு படுத்துகிறது. இதுகுறித்து திமுக ஆதரவாளர்கள் தரப்பில் சற்று சசலப்பு ஏற்பட்டு இருக்கின்றது. இருப்பினும் முதல்வர் என்ற முறையில் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் ஸ்டாலின்.